நாளைய ராசிபலன்(26-08-2025)
மேஷம்:
இன்று உங்கள் அலுவலகத்தையும் வேலையையும் மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் உடல் உபாதைகள் உண்டாகலாம். பயணம் செல்லும் பொழுது எச்சரிக்கை அவசியம்.
ரிஷபம்:
உங்களை சுற்றி உள்ளவர்கள் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். வங்கி தொடர்பான சில தொந்தரவுகளை சந்திக்கலாம். காதல் வாழ்க்கை சில கசப்புகளையும் பிரிவுகளையும் கொடுக்கலாம்.
மிதுனம்:
சில முக்கியமான முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய முயற்சிகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சில வேலைகள் நடக்கலாம்.
கடகம்:
சகோதரி வழி உறவால் உங்களுக்கு சில உதவிகள் கிடைக்கும். வீட்டிற்கு உறவினர்களுடைய வருகை சந்தோஷத்தை கொடுக்கும். சில முக்கியமான வழிபாடு மேற்கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
சிம்மம்:
இன்று சிலருக்கு வேலை பார்க்கும் இடத்தில் மன சங்கடங்கள் உருவாகலாம். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். நட்பு வட்டாரம் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கன்னி:
உங்களுடைய முக்கியமான பொருட்களை இன்று தொலைக்க நேரலாம். இன்று உங்களுக்கு குடும்பத்தில் அவமரியாதை நடக்கலாம். பண விஷயங்களில் கவனம் தேவை. சந்தோஷமான நாள்.
துலாம்:
இன்று சிலர் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து ஓய்வு எடுக்கும் நாள். அமைதியை தேடி செல்ல விரும்புவார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பம் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்:
நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். பண விவகாரத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடக்கும்.
தனுசு:
உங்கள் உறவினர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளும் நாள். பெரிய சவால்களையயும் எளிதாக சமாளிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவை எதிர்பாராமல் செயல்பட வேண்டிய நாள்.
மகரம்:
உங்கள் ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சனி பகவானை வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
கும்பம்:
ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் நாள். கோயில் வழிபாடுகள் செய்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். சில முக்கிய நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கு கொள்வீர்கள்.
மீனம்:
மன சங்கடம் விலகி நிம்மதி உண்டாகும். பிள்ளையின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். முடிந்த வரை பிறரிடம் கோபமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். பதட்டமான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







