நாளைய ராசி பலன்(02-12-2025)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் சொந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகலாம்.
ரிஷபம்:
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். தாய் மாமன் வழி உறவால் உங்களுக்கு நன்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
மிதுனம்:
உங்கள் வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். வருமானம் உயர்த்துவதை பற்றி நீங்கள் ஆலோசனை செய்வீர்கள்.
கடகம்:
இன்று வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். நீண்ட நாள் பண பிரச்சனை விலகும்.
சிம்மம்:
வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கான மதிப்பு உயரும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மையான நாள்.
கன்னி:
திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை விலகும். காதல் வாழ்க்கை வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கடன் சுமை விலகும் நாள்.
துலாம்:
வாழ்க்கையை பற்றி புரிதல் உண்டாகும் நாள். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் உண்டாகும். மருத்துவ ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகி நன்மை உண்டாகும் நாள்.
விருச்சிகம்:
நினைத்த காரியங்கள் செய்து முடிக்கும் நாள். செலவுகளை அதிகமாகும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனை விலகும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு:
வியாபாரம் விரிவடையும் நாள். தாய் வழி உறவுகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலை விலகும்.
மகரம்:
தேவை இல்லாமல் பிறரிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள். உங்களை பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். அக்கம் பக்கத்தில் கவனமாக பேச வேண்டும்.
கும்பம்:
நீங்கள் இன்று திட்டமிட்டு செயல்படுவதால் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். உங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொழுது போக்கு விஷயங்களில் அக்கறை செலுத்துவீர்கள்.
மீனம்:
அலுவலகத்தில் ஏற்பட்ட மன குழப்பம் விலகும். உங்களுக்கு தெரியாத நபர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடன் சுமை குறைந்து நன்மை அடையும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |