நாளைய ராசி பலன் (14-12-2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் உங்கள் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வாழ்க்கை துணையிடம் தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள் வீண் வம்புகளில் வந்து விட்டுவிடும்.

ரிஷபம்:

உங்களுடைய தொழில் முன்னேற்றம் பற்றி யாரிடமும் என்று பகிர்ந்து கொள்ளாதீர்கள். திடீர் சொந்தங்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மிதுனம்:

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரர்கள் உடல் நிலையில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். தங்கம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகலாம்.

இனி 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி- இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்

இனி 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி- இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்

கடகம்:

நீண்ட நாள் பிரச்சனை ஒன்று ஒரு நல்ல முடிவை பெறும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நீங்கள் மனம் விட்டு பேசுவீர்கள். கணவன் மனைவி இடையே சந்தித்த பிரச்சனை விலகும்.

சிம்மம்:

உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் இன்று மிகப்பெரிய முன்னேற்றத்தை காணும் நாள். பெற்றோர் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். உணவு விஷயங்களில் கவனமாக இருங்கள்.

கன்னி:

திருமண தொடர்பான பேச்சுகளில் சில சங்கட்டங்கள் உருவாகலாம். தேவையில்லாமல் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். வெளியூர் பயணம் நன்மையை கொடுக்கும்

துலாம்:

குடும்பத்தினர் உடைய பாராட்டுகளை பெறுவீர்கள். விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கு இன்று ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. நன்மையான நாள்.

விருச்சிகம்:

உங்கள் மனதில் தேவையில்லாத கோபமும் அகங்காரமும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் தியானம் செய்யுங்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். திடீர் பரிசுகள் முக்கிய நபர்களிடமிருந்து பெறுவீர்கள். அரசாங்க ரீதியாக உங்களுக்கு நல்ல அணுகூலம் கிடைக்கக்கூடிய நாள்.

2026ல் பிரச்சனைகள் தீர 12 ராசிகளும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள்

2026ல் பிரச்சனைகள் தீர 12 ராசிகளும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள்

மகரம்:

உங்கள் மனதில் நிம்மதியை பெறுவீர்கள். நல்ல ஓய்வு பெறக்கூடிய அற்புதமான நாள். காதல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இனிமையான சூழல் உருவாகும் காதல் வெற்றி பெறும்.

கும்பம்:

நீண்ட நாட்களாக உங்களுடைய கைகளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். ஒரு சிலர் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழக் கூடிய நாள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்:

பிள்ளைகளுடைய உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத தகவல்களால் வீடுகளில் சில குழப்பங்கள் உண்டாகலாம். திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US