நாளைய ராசி பலன்(20-12-2025)
மேஷம்:
உங்களுக்கு இன்று வேலை ரீதியாக நிறைய அழுத்தங்கள் வரலாம். சிலருக்கு புதிய காதல் மலர வாய்ப்புகள் உள்ளது. மதியம் மேல் பொருளாதார தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
ரிஷபம்:
குடும்பத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். நீங்கள் முடிந்த வரை மன அமைதியோடு இருப்பது நன்மை தரும். உணவு விஷயங்களில் முழு கவனம் தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
காதல் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் விலகும். உங்களுக்கு வீடுகளில் ஆறுதல் கிடைக்கும். சமுதாயத்தில் நற்பெயர் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்ளும் நாள்.
கடகம்:
மன ரீதியாக சந்தித்த வந்த குழப்பங்களும் வருத்தங்களும் விலகும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மலரும் நாள்.
சிம்மம்:
அரசியலில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். சிலருக்கு மருத்துவ செலவுகள் வரலாம். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
கன்னி:
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நல்ல முறையில் முடியும். தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. வருமானத்தில் சந்தித்த தடைகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும்.
துலாம்:
இன்று உங்கள் சொந்த வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகள் எடுப்பதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். மறைமுக எதிரிகள் தொல்லை விலகி செல்வார்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்:
தந்தை ஆரோக்கியத்தில் சில சிக்கல் வரும். தாயிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகலாம். மதியம் மேல் நினைத்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
தனுசு:
சிலருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொண்டு நடக்காமல் போகலாம். இறைவழிபட்டால் நன்மை நடக்கும். நெருங்கிய நண்பர்களை பார்க்கும் யோகம் உண்டாகும்.
மகரம்:
உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கக்கூடிய முக்கியமான நாள். சிலருக்கு இரண்டாம் திருமணம் செய்ய நல்ல வரன் அமையும். சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்:
சிலர் தொலை தூர பயணம் மேற்கொள்ளும் நிலை வரலாம். அக்கம் பக்கத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க ரீதியாக நீங்கள் சந்தித்த சங்கடம் விலகும் நாள்.
மீனம்:
குழந்தைகள் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள். மனதில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |