நாளைய ராசி பலன்(25-12-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு எதிர்ப்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.
ரிஷபம்:
சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சிலர் இறைவழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
உங்கள் வேலைக்காக நீங்கள் தொலைத்தூர பயணம் செல்ல நேரலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.
கடகம்:
உங்கள் மனதில் உள்ள குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். வியாபார ரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். குலதெய்வ வழிபாடுகளில் நீங்கள் பங்கு கொள்ளும் நாள்.
சிம்மம்:
தாய் உடல் நிலையில் நீங்கள் முழுமையாக கவனமாக செலுத்த வேண்டும். வேலையில் உங்களுக்கு புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். வருமான உயர்வு பற்றி சிந்திக்கும் நாள்.
கன்னி:
உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில சங்கடமான நிலை வரலாம். பொருளாதார ரீதியாக நீங்கள் சந்தித்த சங்கடம் விலகும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
துலாம்:
உங்களுக்கு வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கும் நாள். சிலர் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் நாள். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்:
அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மருத்துவ செலவுகள் சந்திக்கும் நாள். மதியம் மேல் எதிலும் கவனம் தேவை.
தனுசு:
இன்று குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். சிலருக்கு பழைய நினைவுகளால் மகிழ்ச்சி அடையக்கூடிய நாள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
தொழில் ரீதியாக நீங்கள் இன்று கடினமாக உழைக்கக்கூடிய நாள். சிலருக்கு சொந்த ஊருக்கு சென்று சொந்தங்களை சந்திப்பீர்கள். தாய் மாமன் வழியால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
இன்று திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நட்புகளை சந்திக்கும் நாள். மதியம் மேல் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மனம் மகிழ்வீர்கள்.
மீனம்:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். சிலர் உங்களுக்கு பிடித்த பொருட்களை பரிசு கொடுப்பார்கள். மாலை மேல் குடும்பத்துடன் வெளியே சென்று மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |