நாளைய ராசி பலன் (24-02-2026)

Report

மேஷம்:

இன்று உடல் சோர்வு காணப்படும். சிலருக்கு நட்புகளின் சந்திப்புகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். ஆடம்பர செலவுகள் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

பெற்றோர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். இன்று மனதில் குழப்பமும், பயமும் உண்டாகும். வழக்கு விஷயங்களில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய நாள்.

மிதுனம்:

பழைய நட்புகளை சந்தித்து மகிழ்வீர்கள். வேலை பளு குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

மகாபாக்ய யோகத்தால் இரண்டு மடங்கு செல்வம் பெறப்போகும் ராசிகள்

மகாபாக்ய யோகத்தால் இரண்டு மடங்கு செல்வம் பெறப்போகும் ராசிகள்

கடகம்:

ஒரு சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். தந்தை உடல் நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் முழு அக்கறையோடு செயல்படுவீர்கள்.

சிம்மம்:

வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். தொழில் ரீதியாக உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.

கன்னி:

இன்று வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். கலை துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பிடித்த விஷயங்கள் செய்வீர்கள்.

துலாம்:

மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து வந்த மோதல்கள் விலகும். நன்மையான நாள்.

விருச்சிகம்:

தேவை இல்லாத வார்த்தைகளை குடும்பத்தில் பயன்படுத்தாதீர்கள். சிலருக்கு முதுகு தொடர்பான பிரச்சனை வரலாம். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சேமிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன்

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன்

தனுசு:

குடும்பத்தில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். பிள்ளைகள் எதிர்கால தேவைக்கு சில விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.

மகரம்:

மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு அரசாங்க ரீதியாக இருந்து வந்த பிரச்சனை விலகும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பம் விலகும்.

கும்பம்:

மனதிற்கு பிடித்தவரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களிடம் வீண் வம்பு செய்தவர்கள் விலகி செல்வார்கள். பிள்ளைகளுக்கு பிடித்த பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழும் நாள்.

மீனம்:

புதிய வண்டி வாகனம் மாற்றுவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் முடியும். முக்கிய ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US