நாளைய ராசி பலன் (19-01-2026)
மேஷம்:
உங்களுக்கு இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலை வரலாம். ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்லும் நிலை வரலாம். வாழ்க்கை துணையுடன் வீண் வாக்கு வாதம் செய்யவேண்டாம்.
ரிஷபம்:
ஒரு சிலருக்கு நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வேலை பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். திடீர் மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள்.
மிதுனம்:
வேலை ரீதியாக நீங்கள் மன அழுத்தம் பெறுவீர்கள். தாயிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்களிடம் பகைமை உருவாகும். காதல் உறவு உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
கடகம்:
இன்று வேலைக்காக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வம்பு வழக்குகளில் சிக்காமல் இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும் நாள்.
சிம்மம்:
இன்று காலை முதல் அதிக கோபமாக நீங்கள் காணப்படலாம். முடிந்த வரை உணவு விஷயங்களில் கணவனமாக இருங்கள். வேலை செய்யும் சக ஊழியர்களிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
கன்னி:
இன்று புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வீடுகளில் இருந்து வந்த மன கவலைகள் விலகும். அத்தை வழி உறவு உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
துலாம்:
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். உங்கள் திறமைக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும். மதியம் மேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்:
காலை முதல் மனதில் எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தந்தையிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சில சிக்கல் வரலாம்.
தனுசு:
இன்று உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். குடும்பத்தில் சில பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதரி வழி உறவால் இருந்த கசப்புகள் விலகும். நன்மையான நாள்.
மகரம்:
இன்று நண்பர்கள் வட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும். சிலர் வீடு நிலம் வாங்குவதை பற்றி யோசிப்பார்கள். சொந்தங்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும் நாள்.
கும்பம்:
அரசு வழியில் சில சிக்கலை சந்திப்பீர்கள். வேலைக்காக நிறைய அலைச்சல் சந்திக்கும் நாள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மீனம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உங்கள் வீடுகளில் இருந்து வந்த பிரச்சனை நல்ல முடிவு பெரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடும் நாள். மதியம் மேல் நற்செய்தி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |