நாளைய ராசி பலன் (21-01-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். உணவு விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்களிடம் தேவை இல்லாமல் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும் நாள்.
கடகம்:
உங்கள் குடும்பத்தில் சில குழப்பமான சூழ்நிலை உண்டாகலாம். சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் வேலைக்காக செல்ல நேரலமாம். வேலை பளு அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும்.
கன்னி:
குடும்பத்தினர் இடையே தேவை இல்லாத கடுமையான வாக்கு வாதங்கள் வரலாம். தொழில் ரீதியாக உடன் பணிபுரிபவர்கள் இடையே தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.
துலாம்:
இன்று மனதில் தொழில் ரீதியாக நேரிய குழப்பங்கள் வந்து செல்லும். வருமானம் உயர்த்துவதை பற்றி யோசிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
உங்களின் பழைய நட்புகளை சந்திக்கும் நாள். எதையும் ஒருமுறைக்கு பல முறை தீர ஆலோசித்து செயல்படவேண்டிய நாள். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும் நாள்.
தனுசு:
பிள்ளைகள் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் போடுவீர்கள். சிலருக்கு நகை வாங்கும் யோகம் வரலாம். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். இறைவழிபாட்டில் மனம் செல்லும்.
மகரம்:
திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். மதியம் மேல் குடும்பத்துடன் நேரம் செலவு செய்வீர்கள்.
கும்பம்:
ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். உங்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அவை நிறைவேறும்.
மீனம்:
வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு கைகளில் பணம் வந்து சேரும். தேவை இல்லாமல் உங்கள் குடும்ப வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |