இன்றைய ராசி பலன்(12-01-2026)

Report

மேஷம்:

உங்கள் வீட்டிற்கு நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

ரிஷபம்:

சொந்த விஷயங்களை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள் வாழ்க்கை துணையிடம் பொறுமையாக பேசுவது அவசியம். சிலர் குடும்பத்துடன் கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.

மிதுனம்:

அரசு தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு எதிர்பார்த்த மருத்துவ செலவுகள் வரலாம். கவனமாகி இருப்பது அவசியம் ஆகும்.

கடகம்:

சொந்தங்கள் மத்தியில் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். முடிந்த வரை வங்கி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்:

இன்று தொழில் ரீதியாக சில பிரச்சனை சந்திப்பீர்கள். தெரியாத நபரிடம் உங்கள் தொழில் விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை.

கன்னி:

வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். நினைத்த வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்ககூடிய நிலை உண்டாகும். போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படவேண்டும்.

துலாம்:

இன்று மனதில் ஒரு வித அமைதி உண்டாகும். நீங்கள் எதிர்பாராத விஷயம் நடக்கலாம். மனதில் குழப்பமும் பயமும் உண்டாகும். மாலை மேல் இறைவழிபாட்டில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்யாதீர்கள். சிலருக்கு கணவன் மனைவி பிரிவு உண்டாகி வாய்ப்பு உள்ளது. வேலை பளு அதிகரிக்கும். சொந்தங்கள் மத்தியில் கவனம் வேண்டும்.

கண்டகசனியால் ஏற்படும் கஷ்டம் விலக செய்யவேண்டிய 5 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

கண்டகசனியால் ஏற்படும் கஷ்டம் விலக செய்யவேண்டிய 5 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

தனுசு:

உங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நடக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல் விலகும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்:

புதிய நட்புகளிடம் கவனமாக இருங்கள். தொலைபேசியில் பேசும் பொழுது கவனமாக இருங்கள். தேவை இல்லாமல் பேசி சிக்கலில் சிக்கி கொள்ளாதீர்கள். வீண் பெருமை தவிர்த்து விடுங்கள்.

கும்பம்:

அரசு வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நாள். குழந்தைகளுடன் உங்களுக்கு பிடித்த நேரத்தை செலவு செய்வீர்கள். வருமான உயர்வை பற்றி யோசிப்பீர்கள். நன்மையான நாள்.

மீனம்:

ஆசிரியர் தொழில் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனம் மாற்றும் சிந்தனை வரும். பிள்ளைகள் வாழ்க்கை விஷயத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US