இன்றைய ராசி பலன் (17-03-2026)

Report

மேஷம்:

தேவை இல்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். முடிந்த வரை உணவு விஷயங்களில் சில கட்டுப்பாடு செலுத்துங்கள். வேலை பளு அதிகரிக்கலாம். நன்மையான நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் சிலர் உங்கள் மீது அதிக அளவில் கோபம் கொள்ளலாம். வம்பு வழக்குகளில் சிக்காதீர்கள். சகோதரி உறவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்:

இன்று உடல் சோர்வு மன சோர்வு உண்டாகும். திருமண வாழ்க்கையில் சந்தித்த சிக்கலை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். வீண் செலவுகள் செய்வதை குறைத்து கொள்ளுங்கள்.

கடகம்:

மன ரீதியாக சந்தித்த குழப்பங்கள் விலகும். தொழில் முன்னேற்றம் அடைய சில முயற்சிகள் செய்வீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

நினைத்ததை முடிக்கும் சிவ மந்திரம்.. எது தெரியுமா?

நினைத்ததை முடிக்கும் சிவ மந்திரம்.. எது தெரியுமா?

சிம்மம்:

உங்களின் திறமை வெளிப்படும் நாள். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலமாகவே அமைய போகிறது.

கன்னி:

தேவை இல்லாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. பணம் சேமிப்பது பற்றி யோசிப்பீர்கள். சிலருக்கு சொந்த ஊர்களுக்கு சென்று சொந்தங்களை சந்திக்கும் சூழ்நிலை வரலாம்.

துலாம்:

உங்களை பற்றி நீங்கள் பெருமையாக நினைத்து கொள்ளும் நாள். நெருங்கியவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான் சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகும். பிடித்த விஷயங்களை செய்து மகிழும் நாள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

தனுசு:

இன்று வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். வருமானம் உயர்த்துவதை பற்றி யோசிப்பீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடையா? காரணம் இதுவாக இருக்கலாம்

குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடையா? காரணம் இதுவாக இருக்கலாம்

மகரம்:

வியபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு லாபமாக அமையும். மனதில் உள்ள குழப்பம் விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள்.

கும்பம்:

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பார்கள். அரசியல் தொடர்பாக உங்களுக்கு சில முக்கியமான நபரை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள்.

மீனம்:

மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் நாள். சிலர் கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US