நாளைய ராசி பலன் (28-05-2026)
மேஷம்:
இன்று மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பமும் சிந்தனையும் உருவாகும். நீங்கள் நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
ரிஷபம்:
இன்று தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். பொருளாதார நெருக்கடிகள் விலகும்.
மிதுனம்:
இன்று எதிர்பாராத முக்கிய நபர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தையின் சொத்து வழியாக நல்ல லாபத்தையும் பெறுவீர்கள். தாய் மாமன் உடன் ஏற்பட்ட பிரச்சனைகள்விலகும்.
கடகம்:
நீண்ட நாட்களுக்கு பிறகு நெருங்கிய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
சிம்மம்:
வியாபாரம் தொடர்பாக நீங்கள் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் உங்களுடைய முடிவிற்கு மதிப்பு கொடுப்பார்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
உங்களுடைய பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். வாழ்க்கை துணை உடன் தேவையில்லை வாக்குவாதம் செய்யாதீர்கள். ஒரு சிலருக்கு பேச்சுக்களால் சில மனக்கசப்புகள் வரலாம்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். சிலர் தூக்கமின்மையால் அவதிப்படலாம். தியானம் செய்வது அவசியம்.
விருச்சிகம்:
நீண்ட நாட்களுக்கு பிறகு வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஒரு சிலர் பிடித்த பொருட்கள் மற்றும் உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு:
உங்களை சுற்றி உள்ள நபர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.
மகரம்:
இன்று நீங்கள் கால் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் மன பதட்டம் காரணமாக முடிவுகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் தப்பித்து விடலாம்.
கும்பம்:
நீங்கள் மகிழ்ச்சியாக உங்களுக்காக நேரம் செலவிடக் கூடிய நாள். குழந்தைகள் நலனுக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.
மீனம்:
இன்று நீங்கள் சுற்றியுள்ளவர்களை மறு பரிசீலனை செய்வது அவசியம். யாரிடமும் நெருக்கமாக பழகுவதற்கு முன்பு யோசித்து பழகினால் எதிர்கால பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |