நாளைய ராசி பலன்(13-11-2025)
மேஷம்:
தொழில் ரீதியாக இன்று நீங்க மிக பெரிய அளவில் முன்னேற்றம் பெரும் நாள். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும் நாள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.
ரிஷபம்:
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும் நாள். தொழில் ரீதியாக நீங்கள் சில எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். உங்களுடைய முன்னோர்களின் முழு ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள்.
மிதுனம்:
சிலர் வீடுகளில் குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். தொழில் ரீதியாக நீங்கள் மிக பெரிய அளவில் நல்ல மாற்றங்களை சந்திக்கும் நாள். மதியம் மேல் உடல் சோர்வு வரலாம்.
கடகம்:
காலை முதல் மனதில் எதிர்பாராத குழப்பங்கள் வரலாம். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வீர்கள். அரசு வழியில் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நாள். மருத்துவ செலவுகள் வரலாம்.
சிம்மம்:
வழக்கு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
கன்னி:
இன்று தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லாதீர்கள். சொந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு சொந்தங்கள் வழியாக சில எதிர்ப்புகள் வரலாம். நன்மையான நாள்.
துலாம்:
உங்கள் வீடுகளில் எதிர்பாராத செய்தி வந்து சேரும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். பெற்றோர்களின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கக்கூடிய நாள்.
விருச்சிகம்:
சிலர் உறவினர்களுடைய விருந்துகளில் பங்கு கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில எதிர்ப்புகள் வரலாம். சொந்தங்களுடைய சூழ்ச்சியில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ளுங்கள்.
தனுசு:
குடும்பத்தில் பிள்ளைகள் மீது முழு அக்கறை செலுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த விஷயங்கள் செய்து மகிழக்கூடிய நாள். உடல் ரீதியாக சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும் நாள்.
மகரம்:
இன்று சிலர் முக்கியமான போட்டிகளில் கலந்து கொள்ள நேரலாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கும்பம்:
முகம் தெரியாத நபர்களால் இன்று உங்களுக்கு ஒரு சில உதவிகள் கிடைக்கலாம். வருமானத்தில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகி செல்லும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மீனம்:
இன்று மனதில் காலை முதல் சில குழப்பங்களை சந்திப்பீர்கள். சிலரின் உண்மை முகத்தை அறிந்து கொண்டு செயல்படும் நாள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |