இன்றைய ராசி பலன்(02-10-2025)
மேஷம்:
முடிந்த வரை இன்று உங்கள் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். மூன்றாம் நபரை உங்கள் குடும்ப விஷயங்களில் தலையிட விடாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
இன்று உங்கள் வழக்கமான வேலைகளில் கூட சில தொந்தரவுகள் வரலாம். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். எதையும் நிதானமாக கடைபிடித்து செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்:
உங்கள் வீடுகளில் எதிர்பாராத குழப்பங்கள் வரலாம். மனதில் தேவை இல்லாத குழப்பங்களால் சங்கடத்திற்கு ஆளாகலாம். அமைதி காப்பது நல்லது. உறவினர்கள் இடையே சில குழப்பங்கள் வரலாம்.
கடகம்:
வாழ்க்கை துணையுடன் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம். நண்பர்களால் உங்களுக்கு சில முக்கியமான உதவிகள் கிடைக்கும். உங்கள் மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும்.
சிம்மம்:
துணிச்சலாக செயல்பட்டு இன்று நினைத்ததை சாதிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகள் அடையும். கடன் சுமை குறைவதற்கான எல்லா வேலைகளும் செய்வீர்கள்.
கன்னி:
இன்று குடும்பத்துடன் கோயில் வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில தொந்தரவு உண்டாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட மோதல்கள் விலகும்.
துலாம்:
பிறரின் மனம் குணம் அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் உழைப்பு உயரும் நாள். வேலையில் சிலருக்கு முன்னேற்றமும் பாராட்டுகளும் கிடைக்கும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.வருமானம் உயரும். தாராளமாக செலவு செய்து மகிழ்வீர்.
தனுசு:
வெளி நபர்களால் உங்களுக்கு சில சங்கடம் உண்டாகும். நேற்று எடுத்த முயற்சிகள் இன்று வெற்றி பெரும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மகரம்:
உங்களுக்கு மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகி நன்மை அடையும் நாள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்:
இன்று சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை ஒன்று நடக்கும். எதையும் போராடி சாதித்து கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் விலகும்.
மீனம்:
உங்களின் மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும். இன்று நீங்கள் முன்னேற்றம் அடையும் நாள். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். பண விஷயங்களில் கவனம் தேவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







