நாளைய ராசி பலன்(27-10-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலர் இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். குடும்பத்துடன் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். மன அமைதியை பெறக்கூடிய நாள்.

ரிஷபம்:

உடல் சோர்வு உண்டாகலாம். காலை முதல் வேலை பளு அதிகரிக்கும். எதிர்பாராத நபரின் சந்திப்பால் நன்மை உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்:

பள்ளி நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்கால வியாபாரத்தை பற்றிய ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடிய நாள் . உடன் பிறந்தவர்களால் சில சிக்கல்களை சந்திக்கலாம்.

கடகம்:

காலை முதல் கணவன் மனைவி இடையே அதிக கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுமை காப்பதால் மட்டுமே அன்றைய நாள் இனிமையாக அமையும். நண்பர்களிடையே சற்று கவனம் தேவை.

சிம்மம்:

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். தாய் வழி உறவுகளால் சில ஆதாயம் உண்டாகும். நட்பு வட்டாரம் விரிவடையும். அமைதி காப்பது நல்லது.

கன்னி:

எதிர்கால திருமண வாழ்க்கையை பற்றி ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். தந்தை வழி உறவுகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மதியமேல் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும்.

நவம்பர் 2025: துலாம் ராசிக்கு கட்டாயம் இதில் கவனம் வேண்டுமாம்

நவம்பர் 2025: துலாம் ராசிக்கு கட்டாயம் இதில் கவனம் வேண்டுமாம்

துலாம்:

இன்று ஒரு சிலர் தியானத்தில் முழுமையான ஈடுபாட்டை செலுத்துவார்கள். எதிர்பாராத நபர்களிடத்திலிருந்து ஒரு நற்செய்தி வந்து சேரும். தந்தை உங்களுக்கு உதவியாக இருப்பார்.

விருச்சிகம்:

உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். சகோதர உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே நல்ல அன்பு அதிகரிக்கும்.

மகரம்:

அலுவலகத்தில் இன்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல பலன் அமையும். சொந்தங்களுடைய உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள்.

கும்பம்:

காலை முதல் உங்களுக்கு மனம் சற்று பதட்டமாக காணப்படும். மதியம் மேல் சில வம்பு வழக்குகள் வர வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனங்களில் மிகவும் கவனம் அவசியம்.

மீனம்:

பொருளாதார சிக்கல் விலகக் கூடிய நாள். வாழ்க்கைத் துணையை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். இறை வழிபாட்டில் மனம் அதிக ஆர்வம் கொள்ளும். முன்னோர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US