இன்றைய ராசி பலன்(14-08-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு வேலையில் சில குழப்பங்கள் உருவாகலாம். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் விலகி செல்லும். பொருளாதாரத்தில் நீங்கள் சந்தித்த சரிவுகள் சரி ஆகும். நன்மையான நாள்.
ரிஷபம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
மிதுனம்:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்லும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும். குடும்பத்துடன் சிலர் ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள். சொந்தங்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்.
கடகம்:
இன்று உங்களுக்கு ஒரு சில காரணத்தினால் மன அழுத்தம் கூடலாம். கணவன் மனைவி இடையே சில மோதல்கள் உருவாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சில சங்கடங்களை கொடுக்கும்.
சிம்மம்:
வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். தாய் வழி உறவால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.
கன்னி:
திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு வருமானத்தில் சில தடைகள் சந்திக்கலாம். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்:
இன்று உங்கள் திறமையை சிலர் பாராட்டுவார்கள். வேலையில் உயர் பதவியும் அங்கீகாரமும் தேடி வரும். உங்களின் மதிப்பு உயரும். உங்களை பற்றி தவறாக பேசியவர் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் நாள்.
விருச்சிகம்:
உங்கள் வீடுகளில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. முன்னோர்கள் வழிபாடு நன்மை கொடுக்கும். வெளியே செல்லும் பொழுது பொருட்களில் கவனம் தேவை.
தனுசு:
உங்கள் வீடுகளில் சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள். அலுவலகத்தில் முக்கியமான வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்:
உங்கள் முன் கோபத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உங்களை பற்றி சிலர் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். இன்று தானம் செய்வதால் உங்கள் கஷ்டம் விலகும்.
கும்பம்:
வீடுகளில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.குடும்ப உறுப்பினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அரசியல் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.
மீனம்:
பிள்ளைகள் பற்றி பெருமை அடையும் நாள். உங்கள் குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் கால கட்டம் ஆகும். உங்கள் விருப்பத்திற்கு குடும்பத்தினர் துணையாக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







