2025 கிருஷ்ண ஜெயந்தி: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
கலியுகத்தில் கிருஷ்ண பகவான் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். இந்து மதத்தின் நூல்களில் சந்திர நாட்காட்டிப்படி அஷ்டமி திதியில் தான் கிருஷ்ண பகவான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
விஷ்ணு பகவானின் தசாவதாரங்களில் எட்டாவது அவதாரமே கிருஷ்ண பகவானின் அவதாரமாகும். கிருஷ்ண பகவான் பூமியில் உதித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடி வருகின்றோம். அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது.
இந்த நாளில் அனைவரும் வீடுகளில் கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகள் படைத்து கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து இந்த வழிபாட்டை மிகவும் சிறப்பாக மேற்கொள்வார்கள். இந்த நாளில் நாம் மனதார கிருஷ்ணரை நினைத்து வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் நடக்கின்ற அதர்மங்கள் அழிந்து தர்மங்கள் நிலைக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாளில் நாம் சில வழிபாட்டுகளை செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாள் கட்டாயமாக நாம் அசைவ உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று சிலர் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அவர்கள் காலை முதல் இரவு வரை கிருஷ்ணர் பகவானை மனதில் நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் மனம் தூய்மை அடைந்து அவர்களுக்கு கிருஷ்ணரின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்கிறார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்களும், விரதம் இருக்க முடியாதவர்களும் கூட கட்டாயம் கிருஷ்ண நாமம் உச்சரித்து வந்தால் கிருஷ்ணரின் அருளால் நம் மன கஷ்டங்கள் விலகும். மேலும், கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கிருஷ்ணர் படத்திற்கு முன்பாக கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதில் கிருஷ்ணருக்கு பிடித்த முக்கியமான பொருட்களில் வெண்ணைக்கு முதலிடம் உண்டு. கிருஷ்ணருக்கு வெண்ணெய் வைத்து வழிபாடு செய்வது அன்றைய நாளில் நமக்கு சிறப்பை பெற்று கொடுக்கும்.
இவ்வாறு சிறு விஷயங்கள் கடைப்பிடித்தும், முறையாக பின்பற்றியும் கிருஷ்ணரை வழிபாடு செய்தால் கட்டாயம் அவர் அருளால் நம் வாழ்க்கையில் தெளிவான பாதை பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







