இன்றைய ராசி பலன்(15-11-2025)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் காலை முதல் சில குழப்பமான சூழ்நிலை வரலாம். எதையும் நிதானமாக யோசித்து முடிவு செய்யுங்கள். வங்கி தொடர்பான விஷயங்கள் விலகும்.
ரிஷபம்:
உங்கள் மனதில் உள்ளதை அப்படியே பேசாதீர்கள். சிலருக்கு உடல் நிலையில் சில சங்கடங்கள் வரலாம். கணவன் உங்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்விக்கும் நாள்.
மிதுனம்:
ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். தந்தை வழி உறவால் சில சங்கடங்கள் வரலாம். வீண் கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தேவை இல்லாத விஷயங்களை வெளியே சொல்லாதீர்கள்.
கடகம்:
சொந்தங்கள் மத்தியில் இழந்த பெயரை மீட்டு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வருமானத்தில் சந்தித்த தடைகள் யாவும் விலகும் நாள்.
சிம்மம்:
சொந்த விஷயங்களை தொழில் செய்யும் இடங்களில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முடிந்த வரை எதையும் நிதனமாக கையாளுங்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் வரன் நினைத்த இடத்தில் இருந்து அமையும். அக்கம் பக்கத்தில் கவனமாக பழக வேண்டும். எதிரிகள் விலகி செல்வார்கள்.
துலாம்:
உடல் சோர்வு உண்டாகும். நாளை பெற்றோர்கள் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களை சுற்றி உள்ளவர்கள் புரிந்து நடந்து கொள்வார்கள். மனதில் தெளிவு பிறக்கும் நாள்.
விருச்சிகம்:
அரசியலில் இருப்பவர்கள் இன்று சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் விலகும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்லவேண்டும்.
தனுசு:
இன்று குடும்பத்தில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் நாள். சொந்தங்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மகிழ்ச்சியான நாள்.
மகரம்:
மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எதிர்கால தேவைக்கான அனைத்து விஷயங்களையும் செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
கும்பம்:
இன்று அலுவலகத்தில் உங்களுக்கு சிலர் எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. திருமண வரன் பார்க்கும் பொழுது கவனம் தேவை. வாகனம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
மீனம்:
உங்கள் குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். சிலர் குடும்பத்துடன் ஆன்மீக பயணத்தில் பங்கு கொள்வீர்கள். நெருங்கிய உறவுகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |