இன்றைய ராசி பலன்(02-09-2025)
மேஷம்:
இன்று சமுதாயத்தில் உங்களுக்கு முக்கிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வேலைக்காக திடீர் வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். மனதில் சந்தோசம் உண்டாகும்.
ரிஷபம்:
அண்னன் தங்கை உருவாகளால் சில சங்கடங்கள் உருவாகும். வாழ்க்கை துணையால் சந்தோசம் உண்டாகும். நண்பர்கள் வழியால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
குடும்பத்துடன் குலதெய்வம் சென்று வழிபாடு செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் உங்களுக்கு சில சிக்கல்கள் உண்டாகும்.
கடகம்:
இன்று வேலைக்காக நிறைய அலைச்சல் உண்டாகும். வரவிற்கு ஏற்ற செலவுகளை அதிகம் சந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான உண்டாகும்.
சிம்மம்:
உங்கள் வியாபாரத்தில் நினைத்த லாபம் கிடைக்கும். வங்கி கணக்கில் உங்களுக்கு சில தொந்தரவுகள் வரலாம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வேலையில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.
கன்னி:
கடனாக கொடுத்த பணம் கைகளுக்கு வரும். குடும்பத்தில் உங்களுக்கு சுயமரியாதை குறையலாம். மனதிற்கு பிடித்த காரியத்தை செய்து மகிழ்வீர்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
துலாம்:
உங்களின் திருமணம் பற்றிய கவலைகள் விலகும். வேலையில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்பட்டதை எண்ணி மனம் வருந்துவார்கள். முகத்தில் தெளிவும் பொலிவும் உண்டாகும்.
விருச்சிகம்:
இன்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகி சந்தோசம் உண்டாகும். சிலரின் எதிர்ப்பாராத சந்திப்புகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். நம்பிக்கையான நாள்.
தனுசு:
குடும்பத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். சகோதிரி வழி உறவால் உங்களுக்கு சில நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனதில் உள்ள பாரம் குறையும்.
மகரம்:
சொந்த வீடு வாங்கும் யோகமும் விற்கும் யோகமும் உண்டாகும். ரியல் எஸ்டேட்செய்வர்களுக்கு நல்ல லாபம் பெரும் நாளாகும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நன்மையான நாள்.
கும்பம்:
இன்று கலை துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் உருவாகும். உடலில் ஏற்பட்ட உபாதைகள் விலகி நன்மை உருவாகும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களை சேருவார்கள்.
மீனம்:
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். பெண் பிள்ளை வழியால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மதியம் மேல் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







