இன்றைய ராசி பலன்(30-12-2025)
மேஷம்:
முடிந்த வரை உங்கள் சொந்த விஷயங்களில் மூன்றாவது நபரை தலையிட செய்யாதீர்கள். குழந்தைகள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். இறைவழிபாட்டில் மனம் செல்லும்.
ரிஷபம்:
உங்களை சுற்றி உள்ள நபர்கள் யார் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொள்வீர்கள். வேலை தொடர்பாக முக்கியமான அழைப்புகள் வரலாம். வங்கி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
மிதுனம்:
அலுவலகத்தில் உங்களுக்கு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோர்கள் உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை.
கடகம்:
கடன் தொடர்பான விஷயங்களில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். தந்தை உங்களுக்கு ஆதரவாக நிற்பார். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நன்மையான நாள்.
சிம்மம்:
உங்கள் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். வியாபாரம் தொடர்பாக கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். வாழ்க்கை துணை வழியாக இன்று எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் நாள்.
கன்னி:
உங்கள் மீது அலுவலகத்தில் சிலர் அவதூறு பரப்ப வாய்ப்பு உள்ளது. நிதானமாக எதையும் அணுகுவது அவசியம். மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல் இல்லாமல் படிக்க வேண்டும்.
துலாம்:
காலை முதல் மனம் முழுமையாக இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்தும். நெருங்கிய நபர்கள் உங்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கையில் சில முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்:
உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு எதிர்ப்பாராத மருத்துவ செலவுகள் வரலாம். காலை முதல் மனம் பதட்டமாக இருக்கும். வேலை ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த விஷயம் நடக்கும் நாள்.
தனுசு:
நீங்கள் கடந்த கால வாழ்க்கையை பற்றி நினைத்து வருத்தம் அடைய நேரலாம். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சிலர் கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்:
எதிர்பாராத நபரின் சந்திப்பால் மனம் மகிழ்ச்சி அடையும். வேலையில் இன்று மிக மிக சுறு சுறுப்பாக இருப்பீர்கள். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.
கும்பம்:
இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். தாய் மாமன் அல்லது அத்தை வழி உறவால் சில மன கசப்புகள் வரலாம். கவனம் தேவை.
மீனம்:
எதிரியால் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகி செல்லும் நாள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் இருந்த பிரச்சனை விலகி செல்லும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |