இன்றைய ராசி பலன்(02.10.2024)
மேஷம்
நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறி பிரச்னை முடிவிற்கு வரும்.சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலை சீராகும். வழக்கில் வெற்றி உண்டாகும்.
ரிஷபம்
பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி லாபம் தரும்.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
மிதுனம்
உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். தாய்வழி உறவு ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
கடகம்
சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.சகோதரர்கள் உதவியால் முக்கிய வேலை நடக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சிம்மம்
வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் முயற்சி முன்னேற்றத்தை நோக்கி வேகமாக நகரும்.பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும்.
கன்னி
எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.தொழிலில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.
துலாம்
எதிர்பார்ப்பு நிறைவேறும். செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். இன்று முன்னோரை வழிபடுவது நல்லது.
விருச்சிகம்
முயற்சியில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.இழுபறியாக இருந்த வேலை எளிதாக முடியும். நண்பர்கள் உதவியால் முயற்சி வெற்றியாகும்.
தனுசு
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும்.பண நெருக்கடி நீங்கும். கடன்களை அடைப்பீர். ஒரு சிலர் வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்.
மகரம்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.ஒரு சிலர் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். புதிய முயற்சியில் இறங்கி லாபம் காண்பீர்.
கும்பம்
வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் இருப்பவர் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.
மீனம்
உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவு வரும்.அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். விலகிச் சென்ற நண்பர் வீடுதேடி வருவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |