இன்றைய ராசி பலன்(07.02.2025)

Report

மேஷம்:

இன்று தேவை இல்லாத விஷயங்களை பற்றி சிந்திப்பதை பற்றி தவிர்க்கவும்,உணவு பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்கவேண்டும்.ஆரோக்கிய சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகலாம்.கவனம் அவசியம்.

ரிஷபம்:

சிலர் உங்களை பற்றி ஏதெனும் விமர்சனம் வைக்கலாம்.அமைதி காப்பது நன்மை தரும்.வியாபாரத்தில் உங்களுக்கு சிக்கல் வந்தாலும் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம்:

பழைய விஷயங்களை பற்றி பிறரிடம் பேசுவதை தவிர்க்கவும்.சகோதரன் சகோதிரி வழி சில தொந்தரவுகள் உருவாகலாம்.மதியம் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

திட்டமிட்ட வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிகள் ஆதாயத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்:

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள் நடமாடும்.காலையில் சில சந்தோஷமான செய்திகள் கேட்பீர்கள்.அரசு அதிகாரிகள் வேலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.

கன்னி:

உழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலையை இன்று முடியும். தந்தை வழி உறவினர் ஆதரவு கிடைக்கும்.பெரியோர் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடித்து லாபம் காண்பீர்.

துலாம்:

உங்கள் மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.இன்று புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்கலாம்.வேலையில் ஒரு சிலருக்கு சில பிரச்சனைகள் வரலாம்.தெளிவாக செயல்படுவது அவசியம்.

கனவில் யானை வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கனவில் யானை வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

விருச்சிகம்:

நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.புதிய பொருட்கள் வாங்குவீர்.

தனுசு:

பல வருடங்கள் உண்டான பிரச்சனை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகும்.மனதில் சந்தோசம் உண்டாகும்.பிள்ளைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

மகரம்:

உங்கள் வேலைகளில் சிறு தடை ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.குடும்பத்தினர் உதவியால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.

கும்பம்:

தடைகளைத் தாண்டி வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

மீனம்:

உங்கள் கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.நீண்ட நாள் உங்கள் வீட்டில் உண்டான பிரச்சனை விலகும்.சிலர் தானம் தர்மம் செய்வதால் நன்மை உண்டாக்கும்.இறைவழிபாடு நன்மை தரும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US