இன்றைய ராசி பலன்(05.11.2024)
மேஷம்
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.எதிர்பார்த்த பணம் வரும்.பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
ரிஷபம்
வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் உண்டாகும்.போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
மிதுனம்
வியாபாரத்தின் சூட்சுமங்கள் அறிந்துகொள்வீர்கள்.லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.
கடகம்
வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும். செயல்களில் லாபம் ஏற்படும்.வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.
சிம்மம்
தொழிலில் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர். அரசு வழி முயற்சி ஆதாயமாகும்.உடலில் சோர்வு உண்டாகும்.
கன்னி
வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும்.தாய்வழி உறவுகளின் ஆதரவு உண்டு.
துலாம்
சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். உழைப்பாளர்கள் நிலை உயரும்.
விருச்சிகம்
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.தெளிவுடன் செயல்பட்டு தேவைகளை அடைவீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.
தனுசு
அலுவலகப் பணியில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்.உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும். வெளியூர் பயணமும், புதிய முயற்சிகளும் இன்று வேண்டாம்.
மகரம்
திடீர் செலவுகள் தோன்றி சங்கடத்திற்கு ஆளாவீர்.எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். அவசர வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
கும்பம்
தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். வருமானம் திருப்தி தரும்.நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு ஆளாகலாம்.உடன் இருப்போர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |