உணவால் உண்டாகும் 5 தோஷங்கள்
உணவு என்பது மிக முக்கியமான ஒன்று.மனிதனின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது நாம் எடுத்து கொள்ளும் உணவை பொறுத்து தான்.மேலும்,உணவு என்பது நம்முடைய ஆரோக்கியத்தை தாண்டி ஆன்மீகத்தையும் தொடர்புடையது.ஆன்மீகத்தில் தோஷம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.
தோஷம் என்பது எதில் இருந்து உருவாகிறது என்று நம்மால் சொல்ல முடியாது.அந்த வகையில் உணவிலும் தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரங்கள்.அப்படியாக உணவில் உண்டாகும் தோஷங்களை பற்றி பார்ப்போம். உணவால் நமக்கு மொத்தம் ஐந்து தோஷம் உருவாகிறது.
1. அர்த்த தோஷம்
2. நிமித்த தோஷம்
3. ஸ்தான தோஷம்
4. ஜாதி தோஷம்
5. சம்ஸ்கார தோஷம்
1. அர்த்த தோஷம்
பொருளால் வரும் தோஷம் அர்த்த தோஷம் ஆகும்.அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.சமைப்பதற்கு பொருட்கள் தேவை மிகவும் அவசியம்.அப்படியாக அந்த நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.அப்படி இல்லாத பொழுது அர்த்த தோஷம் உருவாகும்.
2. நிமித்த தோஷம்
உணவு என்பது சமைக்கும் பொழுது மிகவும் சுத்தமாக சூழ்நிலையிலும் அதில் எந்த ஒரு விஷ பூச்சிகளால் அண்டாத விதத்திலும் அமையவேண்டும்.மேலும் சமைப்பவர்கள் மனநிலை மிக முக்கியம்.அதாவது தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.
3. ஸ்தான தோஷம்
சமைக்கும் உணவானது நல்ல அதிர்வலைகளுடன் சமைக்க வேண்டும்.அப்படியாக சமைக்கும் பொழுது அந்த சூழலில் எந்த ஒரு சண்டைகள் இல்லாமல் அமைதியான சூழலில் இருக்க வேண்டும்.இவ்வாறு போர்களமான சூழலில் உணவு எடுத்துக்கொள்ளும் பொழுது ஸ்தான தோஷம் ஏற்படுகிறது.
4. ஜாதி தோசம்
உணவில் சேர்க்க படும் உண்வுகள் பொறுத்து நம்முடைய மன நிலை மாறும்.அதாவது அசைவம், உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.ஆன்மீக பயணத்தில் செல்ல வேண்டும் என்றால் சாத்விக உணவு எடுத்து கொள்ள வேண்டும்
5. சம்ஸ்கார தோசம்
உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக, இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். இவ்வாறு செய்யாவிடில் சம்ஸ்கார தோசம் உண்டாகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |