இன்றைய ராசி பலன்(30.11.2024)
மேஷம்
செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது அவசியம்.முயற்சிகள் தோல்வியில் முடியலாம்.எதையும் போராடி ஜெயிப்பது போல் சூழ்நிலை உருவாகும்.இன்று எந்த புது முயற்சியும் எடுக்க வேண்டாம்.
ரிஷபம்
விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும்.சகோதர சகோதிரிகள் உங்களுக்கு துணையை இருப்பார்கள்.வெளியூர் பயணம் லாபமாக அமையும்.சந்தோஷமான நாள்.
மிதுனம்
இன்று சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.திடீர் இறைவழிபாடு மாற்றத்தை கொடுக்கும்.விலகி சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வரும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
கடகம்
நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும்.
சிம்மம்
இன்று தலைக்கு மேல் வேலை அதிகரிக்கும்.இன்று எந்த புதிய செயல்களில் ஈடுபட வேண்டாம்.மதியம் மேல் நல்ல செய்து வரும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கன்னி
பணிபுரியும் இடத்தில் பிரச்னை உருவாகும். நிர்வாகத்துடன் மனஸ்தாபம் உண்டாகும். அனுசரித்துச் செல்வது நல்லது.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
துலாம்
உங்களை நீங்கள் புரிந்து கொள்ளும் நாள்.எதிராக்காலத்திற்கு ஏற்ற செயல்களை செய்வீர்கள்.உறவினர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.முன்னோர் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்
பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
தனுசு
இன்று மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள்.உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.வேலைப்பளு அதிகரிக்கும்.இறைவழிபாடு உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும்.எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
மகரம்
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் புதிய முயற்சியில் இறங்குவீர். உழைப்பாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
கும்பம்
உங்கள் நீண்ட நாள் கனவு வெற்றிகரமாக அமையும்.தரவேண்டியவர்கள் பணத்தை உடனே தருவார்கள்.நினைப்பது நடக்கும்.எதிர்பார்த்த தகவல் உங்கள் சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
மீனம்
எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் படவேண்டும்.உங்கள் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.நன்மையான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |