மயானம் சென்றால் தான் தெளிவு பிறக்கும்-புத்தர் சொல்லும் உண்மை
புத்தரை பின்பற்றும் மக்கள் பலர்.அப்படியாக புத்தரிடம் சீடனாக இருக்க வேண்டும் என்றால் அவர் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க என்று சொல்கிறார்.அதாவது ஒருவர் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அவர்கள் கட்டாயம் மூன்று மாதம் காலம் மயானத்தில் செலவிட வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கு சீடர்கள் புத்தரிடம் நாங்கள் உங்களிடம்தான் கற்று கொள்ள வந்தோம் தவிர மயானத்தில் அல்ல என்று சொல்வார்களாம்.அதற்கு புத்தர் பிணங்கள் எரியும் சுடுகாட்டில் மட்டும் தான் "நான் என்ற அகங்காரம் இருப்பது இல்லை.
மூன்று மாதம் தொடர்ந்து எரியும் பிணங்களை பார்க்கும் பொழுது இந்த உலகம் நமக்கானது மட்டும் அல்ல என்பது புரிய வரும்.நாம் இறந்தாலும் இந்த உலகம் எப்பொழுதும் போல் இயங்கி கொண்டு இருக்கும்.இறந்து எரியும் பிணங்கள் அவர்களின் கடைசி நொடி பொழுது வரை உலகம் தனக்கானது என்று எண்ணி இருப்பார்கள்.
இப்பொழுது அவர் இறந்து விட்டார்,அவர் இறந்தது கூட இந்த உலகம் அறியாது.மேலும் கடலில் பல அலைகள் தோன்றி மறைகிறது அதை ஒரு போதும் கடல் கவனிப்பது இல்லை.ஆக மயானத்தில் எரியும் பிணங்களை கவனித்து கொண்டே இரு.
உலகம் உனக்காக அல்ல என்பது புரிய வரும்.அந்த புரிதல் பிறகு என்னிடம் வா.பிறகு உண்மையான தியானம் ஆரம்பம் ஆகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்.உண்மையில் புத்தர் சொன்னது போல் மக்கள் உணர்ந்து கடைபிடித்து வாழ்ந்தால் உலகம் எத்தனை சுகம் கொள்ளும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |