இன்றைய ராசி பலன்(19.10.2024)

Report

மேஷம்

பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம்.

ரிஷபம்

வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.செலவிற்கேற்ற பணம் வரும். குடும்பத்தினர் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலை முடியும். மனம் தெளிவடையும்.

மிதுனம்

எதிர்பாராத பிரச்சனை நெருக்கடிகளை உண்டாக்கும்.மனம் சோர்வடையும்.உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.குடும்பத்தில் சங்கடங்கள் உண்டாகும்.

கடகம்

பிறர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது.உங்கள் அனுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர்.வங்கி சேமிப்பு உயரும்.உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர்.

சிம்மம்

அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.எதிர்பாராத பிரச்னை உங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.தெய்வக் வழிபாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பீர்.

கன்னி

உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். வேண்டாத பிரச்னை தேடி வரும்.ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை.பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

லட்சுமி கடாட்சம் பெறுக வீட்டில் இந்த ஒரு மரம் இருந்தால் போதும்

லட்சுமி கடாட்சம் பெறுக வீட்டில் இந்த ஒரு மரம் இருந்தால் போதும்

 

துலாம்

முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்னை மீண்டும் விசுவரூபம் எடுக்கும்.புதிய பொருட்கள் வாங்குவீர். எதிர்பாராத பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்

உடல்நிலையும் மன நிலையும் சீராகும்.நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவு அதிகரிக்கும்.

தனுசு

பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்.நேற்று நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம்

ஒரு சில வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற் கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்த்ததை அடைவீர்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

கும்பம்

உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.

மீனம்

உடன் பணிபுரிபவருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.நினைத்தது நிறைவேறும்.வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US