இன்றைய ராசி பலன்(28.11.2024)

Report

மேஷம்

தொழிலில் உண்டான பிரச்சனை விலகும்.வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.நண்பர்களுடன் வியாபாரத்தை பற்றிய ஆலோசனை உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

ரிஷபம்

நீண்ட நாள் முடிவிற்கு வராத வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.மனதில் தெம்பும் உற்ச்சாகமும் பிறக்கும்.

மிதுனம்

எடுக்கும் முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு பிரச்சனை உருவாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.முயற்சிக்கேற்ற வருமானம் கிடைக்கும்.

கடகம்

செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர்.திடீர் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயமடைவீர்.

சிம்மம்

பிறர் சொல்லும் விமர்சனங்களை தள்ளி வைப்பது நல்லது.சகோதரி வழியில் பிரச்சனை உண்டாகலாம்.பிறர் செய்து முடிக்காத காரியத்தை நீங்கள் செய்து முடிப்பீர்கள்.

கன்னி

உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு செலவில் கவனம் தேவை.

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

துலாம்

இன்று நீங்கள் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் பிறரிடம் ஆலோசனை மேற்கொள்வீர்கள்.எதிர்பார்த்த காரியம் தாமதத்தை சந்திக்கலாம்.விலகி சென்றவர் உங்களை தேடி வர வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

வாகன வகையில் செலவு ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், இயந்திரப் பணியில் கவனமாக செயல்படுவதும் அவசியம்.

தனுசு

தொழில் முன்னேற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.கடன் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.தடைபட்ட வேலை வெகு விரைவில் நடக்கும்.பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள்.

மகரம்

நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் செயல் லாபமாகும்.உங்கள் அனுகு முறையால் நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி வெற்றியாகும்.

கும்பம்

முக்கியமான முடிவுகளை எடுக்க தயங்குவீர்கள்.நினைத்தது நடக்காமல் போகலாம்.பெற்றோர் உறுதுணையாக இருப்பார்கள்.செல்வாக்கு உயரும்.நிதானம் அவசியம்.

மீனம்

இன்று அமைதி காப்பது நல்லது.மனதில் இனம் புரியாத வருத்தம் உண்டாகும்.நல்லவர் தீயவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.பிறரிடம் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US