நாளைய ராசி பலன்(03-10-2025)

Report

 மேஷம்:

ஒரு சிலருக்கு வியாபாரத்தை இடம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அருமையான நாள்.

ரிஷபம்:

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அறிமுகம் இல்லாத நபர்களால் இன்று ஒரு சில ஆதாயம் பெறுவீர்கள்.

மிதுனம்:

இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் ஒரு தெளிவு பிறக்கும். பொறுமையுடன் செயல்படுவதால் நினைத்த காரியத்தை சாதிக்கலாம். கனவுகள் நினைவாகும் நாள். தாய் உடல் நிலையில் அக்கறை தேவை.

கடகம்:

உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். போட்டி சவால்களை இன்று வெற்றிகரமாக கையாண்டு மகிழ்ச்சி அடைவீர்கள் . வீடுகளில் சுபகாரியங்கள் நடக்கக்கூடிய சூழல் உருவாகும்.

சிம்மம்:

முடிந்தவரை கொடுக்கல் வாங்கலில் மிக கவனமாக இருக்க வேண்டும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். நெருங்கிய நபர்கள் உங்களை விட்டு பிரிய வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

கன்னி:

வருமான உயர்வு பெரும் நாள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு கோவில் வழிபாடுகள் மிகப் பெரிய அளவில் நன்மை கொடுக்கும்.

ஜாதகத்தில் 11-ஆம் இடம் உங்களைப் பற்றி சொல்லும் ரகசியம் என்ன?

ஜாதகத்தில் 11-ஆம் இடம் உங்களைப் பற்றி சொல்லும் ரகசியம் என்ன?

துலாம்:

குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் விலகும். புதிய வண்டி வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

விருச்சிகம்:

சொத்து பிரச்சனைகளில் ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வழங்கப்படும். உடன் இருப்பவர்களின் தேவையை அறிந்து செயல்படுவீர்கள். சிலர் கணவருடன் தொலைதூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

தனுசு:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சகோதர சகோதரிகள் வழியே உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத காரியம் நல்ல முடிவைக் வரும்.

மகரம்:

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்களை தவிர்க்க வேண்டும். வியாபார பணிகளில் உங்களுடைய முழு அக்கறையை செல விடுவதால் மட்டுமே லாபம் பெற முடியும். மனம் சோர்வடையும் நாள்.

கும்பம்:

இன்று ஒரு சிலருக்கு வீண் அடைச்சல் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் மீது உங்களுடைய கவனத்தை செலுத்தாதீர்கள். முடிந்தவரை வெளி வட்டாரத்தில் உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மீனம்:

இன்று தொலைந்த பொருட்களை மீண்டும் பெறுவீர்கள். உதவி என்று உங்களை தேடி சிலர் வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மனதில் சிந்தனை தெளிவாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US