நாளைய ராசி பலன்(05-10-2025)
மேஷம்:
உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வீர்கள். மனைவி வழி சொந்தங்களால் இன்று உங்களுக்கு ஒரு சில சங்கடம் உருவாகலாம்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு சகோதரி வழி உறவுகளால் சில சிக்கல்கள் சந்திக்க நேரலாம். முடிந்தவரை வாழ்க்கை துணையிடம் கவனமாக பேசுங்கள். இன்று மனதிற்கு பிடித்த சில விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
மிதுனம்:
இன்று வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குடும்பத்தினர் உங்களுடைய கருத்துக்கு மரியாதை கொடுக்காமல் போகலாம். கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் நிதானமாக பழகுங்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத பண பிரச்சனைகள் உருவாகலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
சிம்மம்:
இன்று முடிந்தவரை தொலைதூர பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள்.ஒரு சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் வரலாம். மதியமேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
கன்னி:
உங்கள் வீடுகளில் இன்று உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வேலையில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்துடன் சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.
துலாம்:
காலை முதல் ஒரு சிலருக்கு தேவை இல்லாத மனக்குழப்பங்கள் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயமும் கவலையும் நீடிக்கும். மனதிற்கு பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
விருச்சிகம்:
முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். கணவன் வழி சொந்தங்களால் சில பிரச்சனைகள் உருவாகலாம். இறைவழிபாடு மேற்கொள்வது அவசியம்.
மகரம்:
உங்கள் வீண் கோபத்தை தவிர்த்துக் கொள்வதால் மட்டுமே சில விஷயங்களை சாதிக்க முடியும். ஒரு சிலருக்கு பிடிவாதம் அதிகமாகலாம். குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்காமல் போகும் நிலை உருவாகும்.
கும்பம்:
உறவினர்களால் ஒரு சிலருக்கு மன கசப்புகள் உண்டாகும். வழக்கு விஷயங்களை பற்றி ஆலோசிப்பீர்கள். குடும்பமாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள்.
மீனம்:
இன்று உங்கள் வீடுகளில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். உங்களுடைய மதிப்பு உயரும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







