நாளைய ராசி பலன்(22-09-2025)
மேஷம்:
இன்றுஒரு சிலருக்கு வங்கி தொடர்பான வேலைகள் சில சங்கடம் அளிக்கலாம். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளை சந்திப்பீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று உங்கள் காதல் வாழ்க்கை மன மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கு யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்த போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.
மிதுனம்:
உங்கள் வீடுகளில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதல் விலகி செல்லும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்:
இன்று உங்கள் வாழ்க்கையை பற்றிய ரகசியத்தை வெளியே பகிராதீர்கள். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். வம்பு வழக்குகள் சந்திக்கும் நாள்.
சிம்மம்:
தொலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மனைவி வழி சொத்துக்களால் சில பிரச்சனை வரலாம். வீண் பிடிவாதம் தவிர்க்க வேண்டிய நாள்.
கன்னி:
சிலருக்கு கல்லூரி வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்கள் விலகும். நண்பர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். மனதிற்கு பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
துலாம்:
உங்கள் வீடுகளில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உங்களை சுற்றி உள்ளவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன் உங்களை புரிந்து நடந்து கொள்வார்.
விருச்சிகம்:
எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலைகள் சாதகமாகும். வியாபாரத்தில் உங்களது முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு:
உங்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்:
தெரியாத நபரின் வழியாக முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கோபத்தை குறைத்து கொண்டு செயல்பட்டு நன்மை அடைவீர்கள்.
கும்பம்:
உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது பிரச்சனையை தவிர்க்கும். சிறுதொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.
மீனம்:
இன்று உடல் அசதி காரணமாக சிலர் விடுமுறை எடுக்க நேரலாம். உணவு விஷயங்களில் கவனம் தேவை. சிலர் குலா தெய்வ வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







