இன்றைய ராசி பலன்(26-09-2025)
மேஷம்:
உங்கள் வேலையில் மட்டும் நீங்கள் இன்று முழு கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு மதியம் மேல் உடலில் சிறு சிறு உபாதைகள் வரலாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
தொலை தூர பயணத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சொந்த விஷயங்களை நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் உள்ளது.
மிதுனம்:
இன்று உங்கள் மனதில் தேவதை இல்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். உங்கள் வாழ்க்கையை பற்றிய பயம் உருவாகும். சிலருக்கு அலுவலகத்தில் தேவை இல்லாத குழப்பங்களும் பிரச்சனையும் உண்டாகும்.
கடகம்:
உங்கள் தொழில் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண பிரச்சனை உங்களை விட்டு விலகும்.
சிம்மம்:
இறைவழிபாடு செய்வதால் சில பிரச்சனை விலகும். சமுதாயத்தில் உங்களுக்கு சில சங்கடங்கள் வரலாம். தொலை தூர பயணம் சிறப்பாக அமையும். நன்மையான நாள்.
கன்னி:
உங்கள் படிப்பிற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். வீடுகளில் சில தேவை இல்லாத சிக்கல்கள் வந்து சேரும். தந்தை வழி உறவால் சில ஆதாயம் பெறுவீர்கள்.
துலாம்:
இன்று காலை முதல் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையை பற்றிய சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலை உருவாகும். வழக்கு விஷயங்களில் சில பதட்டங்கள் உண்டாகலாம்.
விருச்சிகம்:
உங்களை பற்றி சிலர் தவறாக புரிந்து கொள்ளும் நிலை வரலாம். கணவனுடன் மனைவியாக சிலர் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலை வரலாம். நன்மையான நாள்.
தனுசு:
இன்று பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் . உங்கள் வீடுகளில் சில முக்கியமான சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வழக்கு விஷயம் உங்களுக்கு சாதகமாக முடியும்.
மகரம்:
பொருளாதார நிலையில் சிறந்து விளங்குவீர்கள். வியாபாரத்தில் உண்டான சிக்கல்கள் அனைத்தும் விலகும். முடிவிற்கு வராத முக்கியமான விஷயங்கள் நல்ல முடிவை பெரும்.
கும்பம்:
இன்று ஒரு சிலர் தடைகளைத் கடந்து நினைத்ததை சாதிப்பீர்கள். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.
மீனம்:
சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை. பிறரிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பிரச்சனைக்கு நல்ல முடிவை பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







