நாளைய ராசிபலன்(19-09-2025)
மேஷம்:
குடும்பத்தில் உங்களுக்கான சுமை அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விடுங்கள். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
நண்பர்களுடன் உங்களுடைய பொழுதுபோக்கை இன்று செலவிடுவீர்கள். முடிந்தவரை உங்கள் வங்கி கணக்குகளை சரி பார்க்கவும். எதிர்பாராத ஒரு சில பிரச்சனைகளை மாலை மேல் சந்திக்கலாம்.
மிதுனம்:
எதிர்காலத்தைப் பற்றிய பயம் உருவாகும். உண்மையை பேசி ஒரு சில முடிவுகளை எடுப்பது நன்மையை தரும். குடும்ப ஆலோசனைகளை தவிர்த்து சுயமாக முடிவெடுப்பது மட்டுமே வெற்றியை தேடி கொடுக்கும்.
கடகம்:
உங்களின் கடன் சுமை அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தை பற்றிய பயம் உண்டாகும். தந்தை உடலில் அக்கறை செலுத்த வேண்டும். வீண் வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
சிம்மம்:
வியாபாரத்தை பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம. உடல் நிலையில் மாற்றங்கள் உண்டாகும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
கன்னி:
இன்று வேலையிலும் குடும்பத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. சொந்த பந்தங்கள் உங்களை விட்டு விலகும் நாள்.
துலாம்:
இன்று அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். ஒரு சிலருக்கு தொலைதூர பயணம் செல்ல நேரலாம். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பார்கள்.
விருச்சிகம்:
திட்டமிட்டு செயல்படும் வேலைகள் லாபம் தரும். சூரியன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் உழைப்பு அதிகரிக்கும். ராசிநாதன் வரவை அதிகரிப்பார். பொன் பொருள் சேரும்.
தனுசு:
சொந்த பந்தங்கள் உங்களுக்கு சில ஆதரவை தெரிவிப்பார்கள். குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் நன்மையான நாள்.
மகரம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை பாதிப்பு விலகும்.தாய்வழி உறவின் ஆதரவு உண்டு. உடல்நிலை சீராகும். வழக்குகள் முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
கும்பம்:
நீண்ட நாள் கனவு நனவாகும். பொன், பொருள், வீடு, மனை வாங்குவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஞாயிறன்று புதிய முயற்சி வேண்டாம்.
மீனம்:
நிலம் தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மூன்றாம் நபரை நம்பி ஒரு சில பொறுப்புகளை கொடுக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







