இன்றைய ராசி பலன்(31-08-2025)

Report

மேஷம்:

மனதில் தேவை இல்லாத விஷயத்தை போட்டு குழப்பி கொள்வீர்கள். வேலையில் இடமாற்றம் பற்றி ஆலோசனை செய்வீர்கள். மதியம் மேல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நன்மையான நாள்.

ரிஷபம்:

உங்கள் வீடுகளில் இன்று விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

மிதுனம்:

உங்கள் சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தேவையில்லாத மருத்துவ செலவுகளும் ஆடம்பர செலவுகளும் சந்திக்கலாம். இளைய சகோதர வழியில் சில சங்கடங்கள் உருவாகும்.

கடகம்:

இன்று உங்களுக்கு சகோதரி வழி ஆதரவு கிடைக்கும். குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்த மகிழ்வீர்கள். சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம்.

சிம்மம்:

கட்டாயமாக இன்று நீங்கள் சுயமாக சில முடிவுகள் எடுக்க வேண்டும். தாய் வழி உறவுகளால் சில சங்கடங்கள் உருவாகும். உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கன்னி:

குடும்பத்துடன் சந்தோஷமான நேரத்தை செலவிடுவீர்கள். சிலருக்கு காதல் வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகள் உருவாகலாம். குடும்பத்தாருக்கு வருத்தத்தை தரக்கூடிய செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

துலாம்:

இன்று மனம் காலையிலிருந்து சற்று குழப்பமாகவே காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். இன்று ஓய்வு எடுத்தால் மட்டுமே உடல் நலம் சீராகும்.

குழந்தை பாக்கியம் கிடைக்க ஒருமுறை செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 4 கோவில்கள்

குழந்தை பாக்கியம் கிடைக்க ஒருமுறை செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 4 கோவில்கள்

விருச்சிகம்:

சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு சில அவ பெயர்கள் உண்டாகலாம். பெரியவர்களுக்கு கட்டாயம் மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். தந்தை வழி உறவுகளில்சிக்கல் உண்டு.

தனுசு:

இன்று உங்கள் மனம் காலையிலிருந்து சற்று பதட்டமாகவே காணப்படும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கான நேரத்தை நீங்கள் செலவிடுவீர்கள்.

மகரம்:

இன்று உங்கள் திறமைக்கான முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுப்பீர்கள். வியாபாரம் செய்வதை பற்றிய சில ஆலோசனைகள் நடக்கும். பெற்றோர்கள் உங்களுடைய கனவுகளுக்கு துணையாக நிற்பார்கள்.

கும்பம்:

இன்று நீங்கள் காலையில் இருந்து கோபத்தை குறைத்துக் கொண்டால் மட்டுமே மன அமைதியை காத்துக் கொள்ள முடியும். உணவு பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு அவசியம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மீனம்:

இன்று உங்கள் மனதில் உள்ள பாரம் குறையும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். தாய்மாமன் வழி உறவு நன்மை உண்டாகும்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US