நாளைய ராசி பலன்(01-09-2025)
மேஷம்:
இன்று வீடுகளில் மின்சாரப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. வாழ்க்கையில் அனுபவத்தை வைத்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதியம் மேல் கோபம் அதிகரிக்கலாம்.
ரிஷபம்:
இன்று மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பார்கள். மனதில் இனம் புரியாத சந்தோஷம் உருவாகும்.
மிதுனம்:
இன்று உங்களுடைய பேச்சுக்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். வழக்குககில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். மனதில் உள்ள பயம் விலகும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
கடகம்:
இன்று வியாபாரத்தில் வேலையை தள்ளி போட நினைக்காதீர்கள். மதியம் மேல் சில எதிர்பாராத நிகழ்வுகளால் மன சங்கடம் உண்டாகலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
தாய் வழி சொத்துக்களில் உண்டான பிரச்சனைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிடித்த பொருட்களை வாங்குவதில் சில கசப்புகள் உண்டாகும்.
கன்னி:
கல்லூரி பயிலும் மாணவர்கள் இன்று மிக கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சில தேவையில்லாத பதட்டம் ஏற்படும். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
துலாம்:
இறை வழிபாட்டின் மீது முழு மனதை செலுத்துவீர்கள். என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். சிலருக்கு வயிற்று உபாதைகள் உண்டாகலாம்.
விருச்சிகம்:
சொந்த காலில் நின்று சில முயற்சிகள் செய்து வெற்றி பெறுவீர்கள். பழைய சிந்தனைகளால் மனதில் சில சங்கடங்கள் உண்டாகலாம். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது.
தனுசு:
இன்று உங்கள் சகோதரி வழி உறவால் சில மனக்கசப்புகள் உண்டாகும். மதியம் மேல் வீண் சங்கடங்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மையான நாள்.
மகரம்:
வியாபாரம், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறலாம். சொத்து தொடர்பான தகராறுகள் தீர அமைதி பேச்சு வார்த்தையை அவசியம்.
கும்பம்:
உங்களின் மதிப்பை காத்துக் கொள்ளவும். உங்கள் வேலையை முடிப்பதில் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் விளையாட்டுப் போட்டி, தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மீனம்:
மனம் இன்று மனம் தேவையில்லாத பதட்டம் அடையும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். நீண்ட நாள் பிரச்சனை முடிவைப் பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







