இன்றைய ராசி பலன்(11-07-2025)
மேஷம்:
இன்று இவர்களுக்கு செய்யும் தொழிலில் சில சிக்கல் உண்டாகும். மனசோர்வு ஏற்படும். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும். மன அமைதி காப்பது நன்மை தரும்.
ரிஷபம்:
வெகு நாட்களாக சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவைப்பெறும். முன்னோர்கள் மற்றும் குலதெய்வ வழிபாடு சிறந்த பலன் அளிக்கும். வாழ்க்கை துணையை பற்றிய கவலை விலகும்.
மிதுனம்:
இன்று மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் சில தொந்தரவுகளை சந்திப்பீர்கள். இறைவழிபாடு உங்களுக்கு துணையாக இருக்கும்.
கடகம்:
நண்பர்கள் வட்டம் விரிவடையும். சிலர் சொந்த ஊருக்கு சென்று சில முக்கியமான விஷயங்களை செய்வார்கள். பிறரை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
சிம்மம்:
இன்று மருத்துவ செலவுகள் உண்டாகும் நாள். வீடு வாகனம் மற்றும் தொழில் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி:
குடும்பத்தில் உங்கள் திருமணத்திற்கான பேச்சுக்களை எடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள். உங்கள் வருமானம் உயரும். கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள்.
துலாம்:
இன்று சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகலாம். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்:
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்கியம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி வக்கிரம், அங்கு ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சங்கடமும், அலைச்சலும் ஏற்படும்.
மகரம்:
இன்று உங்கள் கோபத்தை குறைத்துக்கொள்வது நன்மை தரும். பெற்றோர்களிடம் அன்பாக நடந்துகொள்வீர்கள். வீண் செலவுகள் மதியம் மேல் உருவாகும் நிலை உண்டாகும்.
கும்பம்:
இன்று a=தாய் வழி உறவால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தாய் மாமன் வழி உறவில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மீனம்:
இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |