இன்றைய ராசிபலன் (07-10-2025)
மேஷம்:
இன்று உங்கள் உறவுகளிடம் சற்று கவனமாக பழக வேண்டும். ஆவணம் தொடர்பான விஷயங்களில் நிதானம் தேவை. வேலையில் உங்களுடைய உழைப்பு அதிகரிக்கும் நாள்.
ரிஷபம்:
திட்டமிட்டபடி உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். கடன் பிரச்சனையை சமாளிப்பீர்கள். மதியமேல் நினைத்த செய்தி வந்து சேரும்.
மிதுனம்:
பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். மருத்துவப் பணிகளில் இருந்தவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
கடகம்:
இன்று மனதில் ஒரு தெளிவு பிறக்கும் நாள்.உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். வம்பு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
நண்பர்கள் இடத்தில் இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். பொறுமையை கடைப்பிடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகலாம்.
கன்னி:
வியாபாரத்தில் நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்:
வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் மனசோர்வு உண்டாகலாம். உடல் ரீதியாக சில தடுமாற்றங்களை சந்திக்க கூடும். மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்:
குழந்தைகளால் ஒரு சிலருக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களால் உதவி பெறுவீர்கள். உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
இன்று வரவுக்கு மீறிய செலவு உண்டாகும் நாள். உங்கள் மீதான நம்பிக்கையில் சில தடுமாற்றம் உண்டாகும். மதியம் மேல் வெற்றி காண்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
மகரம்:
கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறந்து விளங்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். உங்களுடைய திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
கும்பம்:
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை நல்ல முடிவை தரும். மனதில் அமைதி உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு கூடும். குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்:
பழைய நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். மனதில் சில கசப்புகள் உண்டாகும். பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. மகிழ்ச்சி நிறைந்த நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







