நாளைய ராசி பலன்(31-10-2025)
மேஷம்:
மாணவர்கள் படிப்பில் மந்தமாக இருக்கலாம். சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத சில சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. முடிந்த வரை பொறுமை காப்பது அவசியம் ஆகும்.
ரிஷபம்:
ஒரு சிலருக்கு முக்கியமான பொறுப்புகள் வேலையில் தேடி வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட விரிசல் விலகும். மதியம் மேல் பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்:
காலை முதல் மனதில் சிறு தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் சில சிரமங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
இன்று தொழில் ரீதியாக நீங்கள் சில சிக்கலை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். முன்னோர்களின் வழிபாடு உங்களுக்கு நன்மை அளிக்கும்.
சிம்மம்:
ஒரு சிலருக்கு உறவினர்களால் சில பிரச்சனைகள் வரும். பொருளாதாரத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
கன்னி:
வெளியே செல்லும் பொழுது மிகவும் கவனமாக செல்வது அவசியம் ஆகும். பணி இடத்தில் சிலருக்கு சில தடைகள் வர வாய்ப்புகள் உள்ளது. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று உங்கள் உடல் நிலையில் நீங்கள் முழுவதுமாக கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்:
உடல் நிலையில் நால் முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் இன்று நல்ல பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன் வழி உறவுகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
தனுசு:
ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு இன்று அருமையான நாள். சில நல்ல விஷயங்களை தேடி படிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
மகரம்:
உங்கள் கோபத்தை குறைத்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையை புரிந்து நடந்து கொள்ள முயற்சி செய்ய விரும்புவீர்கள். வழக்கு விஷயத்தில் கவனம் தேவை.
கும்பம்:
இன்று நண்பர்களுடன் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது சற்று கவனம் தேவை. புதிய ஆடை வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
மீனம்:
இன்று உங்கள் வீடுகளில் சில முக்கியமான வேலையை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |