நாளைய ராசி பலன்(13-09-2025)
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்று அலுவலகத்தில் பணி சுமைகள் அதிகரிக்கும். ஒரு சிலர் இன்று உடல் ஆரோக்கிய குறைவால் ஓய்வு எடுக்க நேரலாம், மனைவியிடம் கவனமாக பேசுவது அவசியமாகும்.
ரிஷபம்:
இன்று முடிந்தவரை உங்கள் அத்தை உறவுகளிடம் கவனமாக இருங்கள். வெளியூர் பயணத்தை சற்று தள்ளி வைப்பது நன்மை அளிக்கும். தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று வழக்கு விஷயங்கள் உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். சிலருக்கு மதியம் மேல் சில எதிர்பாராத செய்திகள் வந்து சேரலாம்.
கடகம்:
இன்று குடும்பங்களுடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். பெண் பிள்ளைகளால் ஒரு சிலருக்கு பெருமை உண்டாகலாம். மாலை மேல் ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகள் வரலாம்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் நீங்கள் சந்தித்த நஷ்டம் விலகி நினைத்த லாபம் கிடைக்கும். மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் உங்களுடைய பணியை சரியாக செய்து முடித்து விடுங்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு திருமணம் தொடர்பான வாய்ப்புகள் தேடி வரும். பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சகோதரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
இன்று எதிர்பாராத நபர்களிடமிருந்து ஒரு முக்கியமான செய்தியை பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் ஏற்பட்ட தாமதங்கள் முடிவை கொண்டு வரும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு காலை முதல் மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். கணவனிடம் உங்களுடைய தாய் வழி உறவுகள் பற்றி அதிகம் பேசாதீர்கள். வம்பு வழக்குகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
தனுசு:
இன்று உங்களுடைய மனம் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதியை பெரும். சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கும் நாள். தியானம் செய்யுங்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
மகரம்:
இன்று நண்பர்களின் உதவியால் ஒரு முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். தொலைதூரப் பயணம் செல்பவர்கள் உங்களுடைய உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
இன்று ஒரு சிலர் காலையில் மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்வீர்கள். மதியம் மேல் நண்பர்களை சந்தித்து பொழுதுபோக்கை கழிப்பீர்கள்.
மீனம்:
ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். குழந்தைகள் உங்கள் சொல்லிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







