நாளைய ராசி பலன்(06-09-2025)
மேஷம்:
இன்று நீங்கள் குடும்பத்துடன் தொலைதூர பயணம் செல்ல நேரலாம். சிலருக்கு தங்கைகளுடன் வாக்குவாதம் உண்டாகும். மனைவி உங்களுக்கு எதிராக சில விஷயங்களை செய்வதனால் மனம் வருத்தம் அடைவீர்கள்.
ரிஷபம்:
இன்று உங்கள் வேலையை சரியாக செய்வதால் மட்டுமே உங்களுக்கு அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். சிலருக்கு கவனம் சிதறல் உண்டாகும். மனதை அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம்.
மிதுனம்:
சிலருக்கு காலையில் இருந்து மனம் மிகவும் பதட்டத்துடன் காணப்படும். உணவு விஷயங்களில் கட்டாயம் கட்டுப்பாடு தேவை. தாயிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள் பிரிவுகளை சிந்திக்க நேரலாம்.
கடகம்:
இன்று மனம் பதட்டத்துடன் காணப்படும். மனதிற்கு பிடித்த நபர்களை சந்திக்க நேரலாம். பிள்ளைகளுடன் உங்களுடைய மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள் சந்தோஷமான நாள்.
சிம்மம்:
கட்டாயமாக இன்று நீங்கள் உங்களுடைய கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வதால் மட்டுமே பொருளாதார சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
கன்னி:
இன்று தேவை இல்லாமல் பேசுவதால் அலுவலகத்தில் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாகும். சிலருக்கு பணியிடை மாற்றமும் நடக்கும். அண்ணன் தங்கை உறவுகளில் உண்டான சிக்கல்கள் விலகும்.
துலாம்:
இன்று இறைவன் மீது அதிக பக்தி செலுத்துவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்காக சிலர் துணையாக நிற்பார்கள். அலுவலகத்தில் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்ட நபர்கள் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள்.
விருச்சிகம்:
மனதை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதால் மட்டுமே சில தவறுகளில் இருந்து தப்பிக்கலாம். கணவனிடம் உண்மையை பேசுவதால் மட்டுமே குடும்ப பிரச்சினை சரியாகும். தந்தை உடல்நிலையில் கவனம் தேவை.
தனுசு:
இன்று காலை முதல் உங்களுக்கு சில விஷயங்கள் எதிராகவே நடக்கும். மதியமேல் நீங்கள் குடும்பத்துடன் அன்பான நேரத்தை செலவிடுவீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
மகரம்:
உங்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்ட பயணத்தை நோக்கிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள். குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்துவீர்கள். பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
கும்பம்:
வீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் புகழ்பெற்ற நபரின் அறிமுகம் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
இன்று மனதில் தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய நாள். ஒரு விஷயத்தை நோக்கி பயணம் செல்லும் பொழுது சில தடங்கல் வந்தாலும் அதை தாண்டி வெற்றி அடையக் கூடிய நாள். இறைவழிபாடு அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







