இன்றைய ராசி பலன்(06-08-2025)

Report

மேஷம்:

இன்று மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் சந்தித்த சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்:

நீங்கள் நினைத்த வேலையில் சில தாமதம் உண்டாகலாம். மன சோர்வை தடுக்க தியானங்கள் செய்வது நன்மை அளிக்கும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். தேவை இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

மிதுனம்:

குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் மகிழ்ச்சியை தரும். சொந்த வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகி செல்லும். உடன் இருப்பவர்களை பற்றி நன்றாக புரிந்துக் கொள்வீர்கள்.

கடகம்:

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும்.

சிம்மம்:

இலக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மதியம் மேல் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

கன்னி:

வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். இன்று உங்கள் வாழ்க்கையை பற்றி முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நன்மையான நாள்.

துலாம்:

மனதில் தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும். அக்கம்பக்கத்தினரிடம் மகிழ்ச்சியாக பேசி நேரம் கழிப்பீர்கள். அலுவலகத்தில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். உடல் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

காதலை எளிதாக முறியடிக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?

காதலை எளிதாக முறியடிக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?

விருச்சிகம்:

எதிர்பார்த்த இடத்திலிருந்து மனதிற்கு இனிய செய்திகள் கிடைக்கும். வருவாயில் இருத்த ஏற்ற இறக்கம் குறையும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

தனுசு:

மனதில் வாழ்க்கையை பற்றிய கவலைகளும் சிந்தனைகளும் உருவாகும். உணவு விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். முன்னோர்கள் வழிபாடு நன்மை அளிக்கும். நம்பிக்கையோடு இருக்க வேண்டிய நாள்.

மகரம்:

சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் விற்பனையை மேம்படுத்துவீர்கள். உழைப்புக்கு உண்டான உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

கும்பம்:

தாயாரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் மன சஞ்சலம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சிக்கல் நிறைந்த நாள்.

மீனம்:

இன்று உங்களை சுற்றி உள்ளவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வேலை சுமை அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US