காதலை எளிதாக முறியடிக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. அப்படியாக, ஒரு சில ராசிகளுக்கு இயல்பாகவே எதையும் எளிதாக விட்டுக் கொடுக்கும் தன்மை இருக்கும். அப்படியாக, எந்த ராசிக்காரர்கள் காதலை எளிதாக விட்டுக்கொடுத்து முறியடிக்கும் குணம் கொண்டவர்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் எதையும் எளிதாக கடந்து போகக்கூடியவர்கள். மேலும், இவர்கள் எதார்த்த வாழ்க்கையை விரும்புவார்கள். ஆதலால், காதலில் பிரச்சனை என்றாலும், அதை சமாளிக்க முடியாது என்று தெரிந்த நிலை வந்தால் இவர்கள் அந்த உறவில் இருந்து மிக எளிதாக வெளியேறுகிறார்கள். அதேப்போல், மிதுன ராசிக்காரர்கள் எவ்வளவு வேகமாக காதலில் விழுகிறார்களோ அவ்வளவு வேகமாக அந்த காதலை விட்டு வெளியேறுகிறார்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டாடி வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள். ஆதாலால், அவர்கள் எதையும் மனதில் போட்டுகொண்டு கவலை கொள்ள மாட்டார்கள். இவர்கள் காதல் வாழ்க்கை என்று வந்தால் முழு ஈடுபாட்டோடு தங்கள் அன்பை செலுத்துவார்கள். அதுவே காதலில் இவர்களுக்கு மரியாதை குறைவாக ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அதில் இருந்து யோசிக்காமல் வெளியே வர விரும்புகிறார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் ஒரு முழு சுந்தந்திர பறவையாக வாழ நினைப்பவர்கள். இவர்களை யாரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. மேலும், காதல் என்று வந்து விட்டால் துலாம் ராசியினர் கவிதைகள் எழுதி அசத்துவதில் திறமைசாலிகள். ஆனால், அதுவே காதலில் இவர்களின் சுதந்திரத்திற்கு ஏதெனும்இடையூறுகள் வந்தால் அவர்கள் அந்த உறவை முடித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இவர்கள் பொறுத்த வரையில் இவர்களால் யாருக்கும் தொந்தரவுகள் வருவது இல்லை. அதனால் இவர்களுக்கு ஏதெனும் தொந்தரவுகள் என்றால் அவர்கள் அந்த உறவை நீட்டிக்க விரும்புவதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







