நாளைய ராசி பலன்(25-08-2025)

Report

மேஷம்:

இன்று அலுவலகத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். சிலர் உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில் பேசுவார்கள். அமைதியாக இருப்பதால் பெரிய பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ரிஷபம்:

இன்று உங்கள் நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதால் நன்மை உண்டாகும். தாய் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். குலதெய்வ வழிபாட்டில் சில தடங்கல் உண்டாகலாம்.

மிதுனம்:

மனதில் தெளிவும் நிம்மதியும் பிறக்கும். உடன் பிறந்தவர்களால் உண்டான மன கசப்புகள் விலகும். உங்களை விட்டு விலகி சென்றவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிப்பீர்கள்.

கடகம்:

உங்கள் மன வலிமையை சோதிக்கும் நாள். பல திசைகளில் இருந்து பிரச்சனைகள் வந்தாலும் அதை குடும்ப உறவினர்களால் எதிர்கொண்டு வெல்வீர்கள். பண பிரச்சனை விலகும்.

சிம்மம்:

தாயிடம் வீண் வாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்மாமன் வழி உறவால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நல்ல முடிவைப் பெறும். செல்லப் பிராணிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி:

சகோதரன் உறவுகளில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்ப்பது நன்மை தரும். குடும்பங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் உருவாகலாம். கவனமாக பேசுவதாலும் செயல்படுவதாலும் நன்மை பெறுவீர்கள்.

பகவத் கீதை: வலி தான் வாழ்க்கையின் மிகப் பெரிய பாடம்? ஏன் தெரியுமா?

பகவத் கீதை: வலி தான் வாழ்க்கையின் மிகப் பெரிய பாடம்? ஏன் தெரியுமா?

 

துலாம்:

இன்று நீங்கள் நினைத்ததை சாதிக்கும் நாள். மனதில் ஆன்மீக சிந்தனைஅதிகம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அவர்களுடைய முழு முயற்சியை செலுத்துவார்கள்.

விருச்சிகம்:

வேலையில் உங்கள் முன்னேற்றத்திற்காக சில உழைப்பை போடுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை கேட்டு நடப்பார்கள். மருத்துவ செலவுகள் சிலருக்கு உண்டாகலாம்.

தனுசு:

உங்கள் பிள்ளைகளால் இன்று உங்களுக்கு பெருமை சேர போகிறது. நீண்ட நாள் கவலை ஒன்று முடிவை பெறப்போகிறது. எதிர்காலம் பற்றிய முழு கவலையும் விலகி மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

உங்களைப் பற்றி நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டாம். உங்களுக்கு ஆதரவாக சில நண்பர்கள் உடன் நிற்பார்கள். உங்களை சுய பரிசோதனை செய்து முன்னேற்றிக் கொள்வீர்கள்.

கும்பம்:

காலை முதல் மனம் சென்று பதட்டத்துடன் காணப்படும். வெளியூர் செல்ல நேரலாம். உங்களுடைய உடைமைகளில் இன்று சற்று கவனமாக இருக்க வேண்டும். வீண் வம்பு வழக்குகளை தவிர்க்க வேண்டும்.

மீனம்:

ஒரு சிலருக்கு இன்று பிள்ளைகளால் சில மனக்கசப்புகள் உருவாகலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சில தொந்தரவுகள் வரலாம். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US