இன்றைய ராசி பலன் (27-07-2025)

Report

மேஷம்:

இன்று மனதில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உங்களை பிறரிடம் ஒப்பிடு செய்யாமல் இருப்பது நிம்மதியைக் கொடுக்கும்.

ரிஷபம்:

இன்று கடந்த கால காயங்களை நினைவிற்கு வரலாம். முடிந்தவரை மன்னித்து கடந்து செல்லுங்கள். மன அமைதிக்கான வழியை தேடி செல்வீர்கள். முன்னேற்றம் காணும் நாள்.

மிதுனம்:

இன்று உங்கள் சொந்த விஷயங்களைப் பற்றி பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். மதியம் மேல் மனதில் சில பதட்டம் உண்டாகும். உங்கள் மீது நீங்கள் அதிக அக்கறை செலுத்துவது நன்மை அளிக்கும்.

கடகம்:

இன்று மனதளவில் அதிகம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிரச்சனைகளை எளிதாக கடக்கும் நாள்.

சிம்மம்:

இன்று வேலையில் மற்றும் தொழிலில் இருந்து சற்று ஓய்வு காணும் நாள். உங்களுக்கான முழு நேரத்தை செலவு செய்வீர்கள். வாழ்க்கையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முயற்சிகள் எடுப்பீர்கள்.

கன்னி:

இன்று உங்கள் கனவுகளுக்காக முயற்சி எடுத்து வெற்றிகாணும் நாள். மனதில் எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

துலாம்:

இன்று உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களைப் பற்றி புரிந்துக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்த காயம் விலகி செல்லும். மனதில் உள்ள பயமும் பதட்டமும் விலகும்.

முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் கோபம் வருகிறது?

முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் கோபம் வருகிறது?

 

விருச்சிகம்:

எதிர்காலம் பற்றிய பயமும் சிந்தனையும் விலகி செல்லும். உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு:

இன்று சிறு சிறு விஷயங்களில் கூட சந்தோசம் காண்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களைப் பற்றி சுற்றி உள்ளவர்கள் பெருமையாக பேசும் நாள்.

மகரம்:

இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகளில் குழப்பங்கள் உண்டாகலாம். இருந்தாலும் குழப்பங்களை எளிதாக சமாளித்து விடுவீர்கள். உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்வீர்கள்.

கும்பம்:

இன்று திருமணம் தொடர்பான பேச்சுக்களில் கவனம் தேவை. முடிந்த வரை தேவை இல்லாத சண்டைகள் மற்றும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய வாய்ப்புகள் உருவாகும் நாள்.

மீனம்:

இன்று குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. இன்று மனதில் ஒரு வித அமைதி உண்டாகும். முடிந்த வரை உண்மை மறைத்து யாரிடமும் பேசாதீர்கள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US