இன்றைய ராசிபலன் (09-10-2025)
மேஷம்:
இன்று தேவையில்லாத சந்தேகங்கள் அதிகமாகும். பொருளாதாரத்தில் சில சிக்கலை சந்திப்பீர்கள். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து சொல்லுங்கள். வேலை செய்யும் இடங்களில் பொறுமையாக சொல்வது அவசியம். மனதில் எதிர்காலத்தைப் பற்றிய தேடல் அதிகரிக்கும்.
மிதுனம்:
சுப காரிய பேச்சுக்கள் நல்ல முறைகளில் முடிவடையும். தொழில் ரீதியாக கூட்டாளிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். முன்னேற்றம் நிறைந்த நாள்.
கடகம்:
இன்று உங்கள் பயணங்கள் வழியே நீங்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆன்மீக பணியில் மனதை செலுத்துவீர்கள்.
சிம்மம்:
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய நண்பர்களுடைய அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்த வருத்தங்கள் விலகி சந்தோஷம் உண்டாகும். முயற்சிகள் வெற்றியடையும்.
கன்னி:
இன்று நீங்கள் திட்டமிட்ட பணிகளில் சிறந்து விளங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பதால் மட்டுமே வெற்றி அடையலாம்.
துலாம்:
உங்கள் சிந்தனைகளை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் சோர்வு மனசோர்வு உண்டாகலாம். மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்களுக்கு பொற்காலமாகும்.
விருச்சிகம்:
இன்று உங்கள் பேச்சுகளால் நல்ல லாபம் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள்.
தனுசு:
புதிய நண்பர்களில் அறிமுகம் கிடைக்கும். உறுதுணையாக உங்களுடைய குடும்பங்கள் உங்களுடன் பயணிப்பார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலமாகும்.
மகரம்:
இன்று சிலருக்கு நெருக்கடியான சில சூழல்கள் உருவாகும். சக ஊழியர்களின் ஆதரவு பெறுவீர்கள். எதிர்பாராத பயணத்தின் வழியாக உங்களுக்கு நன்மை உண்டாகும்.
கும்பம்:
இன்று சவாலான விஷயங்களை சுமூகமாக செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மீனம்:
கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மீக பயணத்தில் முழு ஈடுபாட்டை செலுத்துவீர்கள். உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







