லட்சுமி தேவியின் வாசம்: வீட்டில் வறுமையை நீக்கும் துளசி
மகாலட்சுமிக்கும், விஷ்ணுக்கும் மிகவும் பிடித்தமான அதே சமயம் தெய்வீக செடியாக துளசி பார்க்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும் துளசி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிகாலையில் குளித்துவிட்டு துளசி செடியை சுற்றி வருவது, தண்ணீர் தர்ப்பணம் செய்வது வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்பச்செய்யும்.
இவ்வாறு செய்வது லட்சுமி தேவியை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பது ஐதீகம், துளசி இலைகளை கொண்டு விஷ்ணு பகவானுக்கு பூஜை செய்வதும் நற்பலன்களை கொண்டு வரும்.
எனவே வாஸ்து சாஸ்திரங்களின் படி வீட்டில் துளசி செடியை வைத்து வழிபட்டு வர வேண்டும்.
வீட்டின் முற்றத்தில் துளசி செடியை நட்டுவைத்திடுங்கள், மாலையில் துளசியின் கீழ் தீபம் ஏற்றுவது குடும்பத்தில் செல்வ செழிப்பை அதிகரிக்கும்.
துளசி செடி கண்திருஷ்டியில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கிறது. மறந்தும்கூட துளசி செடியை வாட விட வேண்டும், வாடிய இலைகள் இருந்தால் உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும்,
ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது துளசி இலைகளை பறிக்கக்கூடாது.
வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க
துளசி செடியில் இருந்து நான்கு அல்லத ஐந்து துளசி இலைகளை எடுத்து நன்றாக கழுவவும்.
பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிவிட்டு துளசி இலைகளை போட்டு விடவும்.
தினமும் காலை குளித்து முடித்த பின்னர், நீரை வீட்டு வாசலில் தெளித்துவிடவும்.
இப்படி செய்து வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கிவிடும்.