மறந்தும் சிவ வழிபாட்டில் பயன் படுத்தக்கூடாத 2 பொருட்கள்

By Sakthi Raj Mar 17, 2025 12:24 PM GMT
Report

 சிவன் அவன் நம்முடைய கர்ம வினைகளை அறுப்பவர். இவரை வழிபட நம்முடைய ஆசைகள் பற்றுகள் விலகி உலகத்தின் உண்மை நிலை உணருவோம். அப்படியாக, சிவ வழிபாட்டில் சில முக்கியமான பொருட்களை பயன் படுத்தக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, சிவவழிபாட்டில் சந்தனம், வில்வ இலை மற்றும் பச்சரிசி, திருநீறு ஆகியவை பயன்படுத்துவார்கள். அதே போல் சிவன் கோயில்களில் திருநீறு மட்டுமே பிரதான அபிஷேகம் பொருளாகவும், பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

மறந்தும் சிவ வழிபாட்டில் பயன் படுத்தக்கூடாத 2 பொருட்கள் | Two Things We Shouldnt Use In Sivan Worship

ஆனால், ஒரு குறிப்பிட்ட பொருட்கள் சிவவழிபாட்டில் நாம் பயன்படுத்துவதை பார்க்க முடியாது. அதில் ஒன்று தான் மஞ்சள் குங்குமம். இந்த இரண்டு பொருட்களும் அம்பிகை வழிபாட்டிலும், அபிஷேகத்திலும் மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

ஆனால், சிவவழிபாட்டில் இதை பார்க்கமுடியாததற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, குங்குமம் அழகின் வடிவமாக பார்க்கப்படுகிறது.

சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள்

சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள்

மேலும், குங்குமம் திருமணமானப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். குங்குமம் பெண்பாலாக பார்க்கப்படுகிறது.

ஆனால், சிவபெருமான் முற்றும் துறந்தவராக இருக்கிறார். அதனால், குங்குமம் சிவ வழிபாட்டில் வழங்கப்படுவதில்லை. குங்குமம் என்பது மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் ஆகும்.

 ஆதலால், சிவலிங்கத்தின் மீது மஞ்சள் அர்ச்சனை செய்தால் சிவனை வழிபட்ட பலன் கிடைக்காது என்றும், சிவன் கோபம் அடையலாம் என்றும் நம்பப்படுகிறது.

மறந்தும் சிவ வழிபாட்டில் பயன் படுத்தக்கூடாத 2 பொருட்கள் | Two Things We Shouldnt Use In Sivan Worship

இத்துடன் பெண்களின் அழகை அதிகரிக்க மஞ்சள் பயன் படுத்தப்படுவதால் மஞ்சள் சிவனுக்கு உகந்தது இல்லை என்பதும் நம்பிக்கை. மேலும், பெண்கள் அதிர்ஷ்டம் பெறுக குங்குமம் பயன்படுத்துவார்கள், ஆனால் சிவபெருமான் அழிக்கும் கடவுள்.

அழகு அல்லது உலக இன்பத்துடன் தொடர்பு உடைய எந்தவொரு பொருளும் சிவ வழிபாட்டில் ஏற்பதில்லை. சிவன் பற்றற்றவர். அவர் ஆடம்பரமாக எதையும் விரும்புவதில்லை. இருந்தாலும், சிவ வழிபாட்டில் மட்டும் தான் குங்குமம் வழங்கப்படுவதில்லை.

ஆனால் சிவனின் சரி பாதியான அம்பாள்களுக்கு குங்குமம் வழங்கப்படுகிறது. ஆதலால், அன்னையை தரிசித்து குங்குமம் வைக்க சிவனின் அருளையும் சேர்த்து பெறலாம் என்பது நம்பிக்கை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US