சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள்

By Sakthi Raj Mar 17, 2025 11:42 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த, கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிக பெரிய மாற்றம் கொடுக்கம் . இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனை கொடுக்கம். 2025 மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரண்டு கிரகங்களும் தங்கள் பாதையை மாற்றி கொள்ள போகிறார்கள்.

மார்ச் 14 சூரியன் தனது ராசியை மாற்றினார். அதன்படி, சூரியன் கும்பத்திலிருந்து மீன ராசியில் நுழைகிறார். பின்னர், மார்ச் 15 ஆம் தேதி புதன் பின்னோக்கி செல்ல தொடங்கினார். இந்த இரண்டு நாட்களில் புதன் சூரியன் பெயர்ச்சி நல்ல நேரத்தை வழங்க கூடும். அப்படியாக, இதனால் எந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ போகிறார்கள் என்று பார்ப்போம்.

முருகப்பெருமானின் ஆறுமுகத்தின் தத்துவங்கள் தெரியுமா?

முருகப்பெருமானின் ஆறுமுகத்தின் தத்துவங்கள் தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் புதனின் மாற்றத்தால் மிக பெரிய வாய்ப்புகளை சந்திக்க போகிறார்கள். இவர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். பொருளாதார சிக்கல் படிப்படியாக குறையும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் தோன்றும். மனதில் சந்தோசம் பெருகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புதனின் மாற்றம் செய்யும் காரியங்களில் நல்ல வெற்றியை கொடுக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புதனின் மாற்றம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு இந்த காலகட்டத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் செல்லும். காதல் வாழ்க்கை சாதகமாக அமையும். பதவி உதவி கிடைக்கும். குடும்ப பிரச்னை நல்ல முடிவிற்கு வரும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US