வாஸ்து: புது வீடு வாங்குபவர்கள் கவனத்திற்கு- இந்த விஷயங்களை பாராமல் வாங்காதீர்கள்
நம்முடைய ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும். நாம் எப்படி திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கு ஜோதிடம் பார்கின்றமோ, அதே போல் புதிய வீடு நிலம் வாங்கும் பொழுது நாம் கட்டாயம் வாஸ்து பார்த்து தான் வாங்க வேண்டும்.
அவ்வாறு வாங்கும் பொழுது தான் நாம் வாஸ்துவால் உண்டாகும் பிரச்சனையை தவிர்க்கலாம். அப்படியாக, புதிய வீடு வாங்கும் பொழுது நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய வாஸ்து குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
தவறான திசையில் பிரதான கதவு:
ஒருவரின் வீட்டில் முக்கியமான ஒரு விஷயமாக பிரதான கதவுகள் இருக்கிறது. அதனால் அந்த கதவுகள் சரியான திசையில் அமையப்பெற்று இருக்கிறதா? என்று பார்ப்பது மிக மிக அவசியம் ஆகும். அப்படியாக, வீடுகளில் பிரதான கதவுகள் எப்பொழுதும் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும்.
அவ்வாறு அமையும் பொழுது தான் வீடுகளில் நேர்மறை சக்திகள் சூழ்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதுவே வாசல், தெற்கு அல்லது தென்மேற்கு திசைகளில் அமைந்து இருந்தால் அது மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு கதவுகள் அமைந்து இருக்கும் பொழுது, குடும்பத்தில் சண்டைகள் மற்றும் நிம்மதியின்மை உருவாக வாய்ப்புகள் உள்ளது.
வடகிழக்கு மூலையில் உள்ள கழிப்பறை:
ஒருவர் வீட்டில் வடகிழக்கு என்பது புனிதமான பகுதி ஆகும். இந்த பகுதி தான் நீர், அமைதி மற்றும் ஞானத்துடன் தொடர்புடையது. அதனால், அந்த திசையில் கழிப்பறை வைப்பது மோசமான பலனை கொடுக்கிறது. ஆதலால் வீடுகளில் கழிப்பறை அமையப்பெற்று இருக்கும் இடத்தை நாம் சரியாக கவனிப்பது அவசியம் ஆகும்.
தவறான இடத்தில் சமையலறை:
ஒருவர் வீட்டில் சமையலறை என்பது பூஜை அறைக்கு நிகரான ஒரு விஷயம் ஆகும். மிகவும் முக்கியமான இந்த சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைந்து இருக்க வேண்டும். தென்கிழக்கு (அக்னி கோன்) திசை என்பது சமையலறைக்கு சிறந்த இடம். தவறான திசையில் அமைந்து இருந்தால் குடும்பத்தில் அதிகப்படியான கோபங்களும் உடல்நல கோளாறுகளும் ஏற்படும்.
வீட்டின் நடுவில் படிக்கட்டு:
இப்பொழுது பலரும் வீட்டில் உள்ளே மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் அமைக்கின்றனர். அதை வீட்டில் சரியான திசையில் அமைக்க வேண்டும். மறந்தும் வீட்டின் மையம் பிரம்மஸ்தானத்தில் அமைக்கக்கூடாது. இவ்வாறு அமையப்பெற்று இருக்கும் பொழுது அவை வீடுகளில் நிம்மதியின்மையை குறிக்கிறது.
ஆக, வீடு வாங்கும் பொழுது முடிந்த அளவு நாம் வாஸ்து பார்த்து வாங்குவது நமக்கு எதிர்காலத்தில் சந்திக்கும் பிரச்சன்னைகளில் இருந்து பாதுகாக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |