வைகாசி வெள்ளிக்கிழமை வழிபடும் முறைகள்
வெள்ளிக்கிழமை வழிபாடு என்றாலே மகாலட்சுமி தாயாரை வணங்குவது தான். இந்த வழிபாடு செய்பவர்கள் தினம் தவறாமல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்து விடுங்கள்.
அதுமட்டுமின்றி பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இது மகாலட்சுமி தாயார் உட்பட அனைத்து தெய்வங்களையும் நம் வீட்டிற்கு வர வைக்கும்.
அதே போல் வெள்ளிக்கிழமை மாலையிலும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இது நம் வீட்டிற்கு செல்வ வளத்தை பெருக்கி தரும் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி நாளைய தினம் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் உகந்தது வாய்ப்புள்ளவர்கள் அதை செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பெண் தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
இது மிகவும் முக்கியம் மகாலட்சுமி தாயார் ஆலயம் இருப்பின் மேலும் சிறப்பு. அப்படி செல்லும் வேளையில் தெய்வத்திற்கு பூக்கள் வாங்கி கொடுங்கள். இது உங்கள் வீட்டில் பண தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய வழிவகுக்கும்.
இவற்றுடன் சேர்த்து பிரம்ம முகூர்த்த வேலையில் வீட்டின் நிலை வாசலுக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து வைத்து விட்டு நிலை வாசலுக்கு சாம்பிராணி தூபம் ஊதுபத்தி போன்றவற்றை காட்டி வழிபாடு செய்யுங்கள்.
இது உங்களுக்கு பலவகையான ஐஸ்வர்யங்களை தேடி தரும். இந்த நாளில் முடிந்தால் மகாலட்சுமி தாயார்க்கு எளிமையான நெய்வேத்தியத்தை படைத்து நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |