பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

By Sakthi Raj Oct 09, 2026 06:27 AM GMT
Report

இந்த உலகத்தில் மனிதர்களுக்கு சில நேரங்களில் மனிதாபிமானம் என்பது ஒரு தேடுதலாகவே இருக்கிறது. ஆனால், உண்மையில் மனிதர்களாக பிறந்த நாம் எல்லோரிடத்திலும் அன்பும் கருணையும் பாசமும் கொண்டு வாழ வேண்டும்.

அப்படியாக, எவர் ஒருவர் பிறருடைய துயரங்களை உணர்கிறார்களோ அவர்கள் பகவானுடைய திருவடியில் வாழக்கூடிய அந்த பாக்கியம் கிடைக்கிறது. அப்படியாக, இதற்கு சான்றாக ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

ஒருநாள் தோட்டத்தில் ஒரு காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வைணவ சமயத்தின் மிக முக்கியமான தத்துவஞானியும், சமூக சீர்திருத்தவாதியும் ஆன ராமானுஜர்.

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா? | Vainava Ramanuja Sees Govindas Kindness To A Snake

உங்கள் நட்சத்திரம் இதுவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் தெரியுமா?

உங்கள் நட்சத்திரம் இதுவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் தெரியுமா?

அதாவது, அங்கே ராமானுஜருடைய சித்தியின் மகனான கோவிந்தன் அவருடைய கையில் ஒரு பாம்பு இருந்தது. கோவிந்தன் அங்கு பாம்பினுடைய வாயில் கையை விடுகிறார்.

பிறகு விரலால் ஏதோ பாம்பினுடைய வாயில் செய்து கொண்டிருக்கிறார். பிறகு பாம்பை கீழே விட்டு விடுகிறார். அதன் பிறகு பாம்பும் புதிரில் சென்று மறைந்து விடுகிறது. அதனை தொடர்ந்து கோவிந்தனும் நீராட குலத்திற்கு சென்று விடுகிறார். ராமானுஜருக்கு இதை பார்த்து ஆச்சரியம் பாம்புடன் என்ன செய்தார் என்று புரியவில்லை.

கோவிந்தா பாம்புடன் என்ன செய்தார் என்று அவர் கேட்கிறார். அதற்கு கோவிந்தன் சொல்கிறார். தோட்டத்தில் பாம்பு ஒன்று மிகுந்த வலியில் துடித்துக் கொண்டு இருந்தது. அருகில் சென்று பார்த்த பொழுது அந்தப் பாம்பினுடைய நாக்கு ஒரு முள் தைத்திருந்தது.

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா? | Vainava Ramanuja Sees Govindas Kindness To A Snake

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள்

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள்

பிறகு என்னுடைய விரலால் அதை எடுத்துவிட்டு அதனுடைய வலியை போக்கினேன் என்கிறார். உடனே ராமானுஜர் கோவிந்தா "பாம்பை கண்டால் படையும் நடுங்கும்" ஆனால் நீ பாம்பு கடித்து உயிர் போனாலும் பரவாயில்லை என்று அதனுடைய வலி நீங்குவதற்கு வாய்க்குள் கையை விட்டு அதனுடைய நாக்கில் விரலை வைத்தும் உள்ள எடுத்திருக்கிறாயே பிறருடைய துக்கம் கண்டு "ஐயோ" என்கின்ற இரக்கம் கொள்கின்ற மனம் குணம் உன்னிடம் நிறைந்து இருக்கிறது என்று ராமானுஜர் வியந்து வாழ்த்துகிறார். இந்த கோவிந்தன் தான் பிறகு "எம்பார்" என்ற ஆச்சாரியாக விளங்கினார்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US